Friday, 23 December 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் வணிகவியல் பிரிவு ஊழியர்களுக்கான வாடிக்கையாளர் சேவை பற்றிய கருத்தரங்கு

திரு மஹேஷ் அவர்கள் உரையாற்றுகிறார்



இந்திய ரயில்வேயில் பயணிகள் மற்றும் சரக்கு வாடிக்கையாளர்கள் முக்கிய பங்காற்றுவதால், ரயில்வே ஊழியர்கள் தங்களது வாடிக்கையாளர்களை மரியாதையாக நடத்துவதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தின் வணிகவியல் பிரிவு அதிகாரிகளால், இன்று (23.12.2016) சேலம் கோட்ட அலுவலகத்தில், வாடிக்கையாளர் சேவை பற்றிய கருத்தரங்கு நடத்தப்பட்டது. இந்த கருத்தரங்கில் சேலம் கோட்ட வணிகவியல் ஒருங்கிணைப்பு மேலாளர் திரு.விஜுவின் அவர்கள் தலைமை தாங்க,  ஈரோட்டைச் சேர்ந்த ப்ரோசாம்ப்ஸ் மனிதவளநிறுவனத்தை சேர்ந்த திரு மஹேஷ் வி கிரி அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.  திரு திரு மஹேஷ் அவர்கள் பேசுகையில் வாடிக்கையாளர்களை மரியாதையாக நடத்தினால், அவர்களும் நமக்கு மரியாதை தருவார்கள் என்றும், ரயில்வே ஊழியர்களைப் போலவே அவர்களைக் கருதி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதன் மூலம், ரயில்வேயும் மேலும் முன்னேற்றம் காண முடியும் என்றும் தெரிவித்தார்.  பயணிகள் சேவையில் நேரடியாக ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்கள் தாங்கள் மட்டுமன்றி தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களையும் வாடிக்கையாளர்களை மரியாதையாக நடத்த கற்றுத்தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். பின்னர் அவர் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.  சேலம் கோட்டத்தின் வணிகவியல் பிரிவை சேர்ந்த 62 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர். 

சேலம் கோட்ட உதவி மேலாளர் திரு எம். ஷாஜஹான் நன்றியுரை வழங்கினார்.  முன்னதாக சேலம் கோட்ட வணிக மேலாளர் திரு. கே. மது வந்தோரை வரவேற்றார். 


Wednesday, 21 December 2016

சேலம் கோட்ட வணிகவியல் பிரிவு அதிகாரிகளால் ஈரோடு மற்றும் கரூர் ரயில்நிலையங்களில் திடீர் பயணச்சீட்டு பரிசோதனை





சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா அவர்களது உத்தரவின் பேரில் சேலம் கோட்டத்தின் பல்வேறு ரயில்நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடீர் பயணச்சீட்டு பரிசோதனைகளின் தொடர்ச்சியாக, நேற்று மதியம் முதல் இரவு வரை ஈரோடு மற்றும் கரூர் ரயில்நிலையங்கள் மற்றும் மும்பை நாகர்கோவில் விரைவு ரயில், மங்களூர் சென்னை எழும்பூர் விரைவு ரயில், சேலம் கரூர் பயணிகள் ரயில் போன்ற ரயில்களில், சேலம் கோட்ட உதவி வணிக மேலாளர் திரு. எம். ஷாஜஹான் அவர்கள் தலைமையில் 7 பயணச்சீட்டு பரிசோதகர்கள் மற்றும் 1 ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் கொண்ட குழு திடீர் பயணச்சீட்டு பரிசோதனை மேற்கொண்டது. இதில் 94 பேர் பயணச்சீட்டு இல்லாமலும் இருவர் கட்டணம் செலுத்தாமல் சரக்குகளை எடுத்துச் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் 35,700 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. 1989;ம் ஆண்டு இந்திய ரயில்வே சட்டம்  138வது பிரிவின் படி தகுந்த பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் சரக்குகளை தங்களுடன் எடுத்துச் செல்வதும், தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டு அவர்களிடம் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதுடன் ஓராண்டு வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதால், பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வதை தவிர்க்குமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

Monday, 19 December 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தின் வணிகவியல் பிரிவு அதிகாரிகளால் ஈரோடு ரயில் நிலையத்தில் திடீர் பயணச்சீட்டு பரிசோதனை

 ஈரோட்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பயணச் சீட்டு பரிசோதனை


 சேலம் கோட்ட வணிக மேலாளர் பயணச்சீட்டுகளை பரிசோதிக்கிறார்

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தின் வணிகவியல் பிரிவு அதிகாரிகளால் ஈரோடு ரயில் நிலையத்தில் இன்று (19.12.2016) 15 திடீர் பயணச்சீட்டு பரிசோதனை 13 விரைவு ரயில்களிலும் 2 பயணிகள் ரயில்களிலும் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. ஹரி சங்கர் வர்மா அவர்களது ஆணையின் பேரில் மேற்கொள்ளப்பட்டது. 140 பேர் பயணச்சீட்டு இல்லாமலும், சரக்குகளை புக்கிங் செய்யாமல் எடுத்துச் செல்வதும், கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் 52,870 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த சோதனை சேலம் கோட்ட வணிக மேலாளர் திரு கே.மது அவர்கள் தலைமையில் 13 பயணச்சீட்டு பரிசோதகர்கள் மற்றும் 2 ரயில்வே பாதுகாப்புப்படை வீர்ர்களால் நடத்தப்பட்டது. சேலம் கோட்டத்தின் பிற இடங்களிலும் இது போன்ற திடீர் பயணச்சீட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். 

Thursday, 15 December 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் 2016ம் ஆண்டுக்கான ஓய்வூதியர் குறை தீர்ப்பு மன்றம்

 
சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. ஹரி சங்கர் வர்மா உரையாற்றுகிறார்

 ஓய்வூதியர் குறை தீர்ப்பு மன்றத்தில் கலந்து கொண்டவர்கள்
சேலம் கோட்ட முதுநிலை நிதி மேலாளர் திரு. பி. கம்பன்உரையாற்றுகிறார்

2016ம் ஆண்டிற்கான ஓய்வூதியர் குறை தீர்ப்பு மன்றம் இன்று (15.12.2016) தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கில் நடைபெற்றது. இம் மன்றத்தில் சேலம் ரயில்வே கோட்ட  மேலாளர் திரு. ஹரி சங்கர் வர்மா தலைமை ஏற்றார்.  100 ரயில்வே ஓய்வூதியர்கள் மற்றும் பயனாளிகள் இந்த  மன்றத்தில் கலந்து கொண்டு தங்களது மனுக்களை சமர்ப்பித்தனர்.  மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நிறுவனங்களின் நிலைக்குழுவின் உறுப்பினர்கள் ஓய்வூதியர்களுக்கு உதவ அழைக்கப்பட்டிருந்தனர். சேலம் கோட்ட முதுநிலை நிதி மேலாளர் திரு. பி. கம்பன், சேலம்  கோட்ட பணியாளர் நல அலுவலர் திரு எஸ். திருமுருகன், மற்றும் இதர கோட்ட  அதிகாரிகள் இந்த  மன்றத்தில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசுகையில், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. ஹரி சங்கர் வர்மா, இந்திய ரயில்வே மற்றும் இந்திய ராணுவம் இரண்டும் தங்களது ஓய்வூதியர்களின் நலனில் பெரும் அக்கறை காட்டி வருவதாகவும், நாடெங்கிலும் உள்ள இந்திய ரயில்வேயின் ஓய்வூதியர்களின் குறைகள் 99 சதவீதம் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

மொத்தம் 138 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டதில், 118 மனுக்கள் அனுமதிக்கப்பட்டு, 26,35,279 ரூபாய்கள் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.  சேலம் கோட்டம் துவக்கப்பட்ட நாளிலிருந்து நடத்தப்பட்டு வரும் இத்தகு ஓய்வூதியர் குறை தீர்ப்பு மன்றங்களில் பைசல் செய்யப்பட்ட தொகைகளிலேயே அதிகமான தொகை இதுவாகும். 16 மனுக்கள் நடைமுறையில் உள்ள விதிகளுக்கு புறம்பாக இருந்ததால் தள்ளுபடி செய்யப்பட்டன.  போதிய ஆவணங்கள் இல்லாததால், 4 மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள இயலவில்லை.

குறை தீர்ப்பு மன்றத்தில் பங்கேற்ற ஓய்வூதியர்கள் மற்றும் பயனாளிகள் சேலம் கோட்ட நிர்வாகம் தங்களது குறைகளை கேட்டு அவற்றை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுத்து வருவது குறித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். 

Wednesday, 14 December 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் பயணச்சீட்டு பெற கிரடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன


மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் மின்னணு இந்தியா (டிஜிட்டல் இந்தியா) திட்டத்தின் கீழ், ரயில் பயணிகள் ரொக்கமின்றி டெபிட் மற்றும் கிரடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பயணச் சீட்டு பெற உதவும் பொருட்டு, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரி சங்கர் வர்மா அவர்களது உத்தரவின் பேரில், சேலம் கோட்ட வணிகவியல் பிரிவு அதிகாரிகள், இந்திய ஸ்டேட் வங்கியின் ஒத்துழைப்புடன், கோயம்புத்தூர் (2), சேலம் (1), மற்றும் ஈரோடு (1) ரயில்நிலையங்களில் உள்ள ரயில்பயணச்சீட்டு முன்பதிவு மையங்களில் கிரடிட் கார்டு மூலம் செயல்படும் 4 பணப்பரிவர்த்தனை இயந்திரங்களை சோதனை அடிப்படையில் நிறுவியுள்ளது. ஏற்கனவே இந்த ரயில்நிலையங்களில் தலா 1 டெபிட் கார்டு மூலம் செயல்படும் இயந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன.  ரயில் பயணிகள் தங்களது ரயில் பயணச்சீட்டுகளைப் பெற இந்த இயந்திரங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  சேலம் கோட்டத்தில் மேலும் 15 ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு முன்பதிவு மையங்களில் விரைவில் இது போன்ற இயந்திரங்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.  

Tuesday, 13 December 2016

திருப்பூர், ஈரோடு, சேலம், விருத்தாசலம் வழியாக கோயம்புத்தூரிலிருந்து செங்கல்பட்டு வரை சிறப்பு ரயில்கள்



கிறிஸ்துமஸ், புத்தாண்டு, இருமுடி, தைப்பூசம் மற்றும் பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க கீழ்க்கண்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ரயில்பெட்டிகள் அமைப்பு: 13 முன்பதிவற்ற பொதுப் பெட்டிகள், 2 லக்கேஜ் மற்றும் பிரேக் வேன்கள்=மொத்தம் 15 ரயில்பெட்டிகள்

இயக்க நாட்கள்:
கோயம்புத்தூரிலிருந்து திங்கள் மற்றும் புதன்கிழமைகளில்
செங்கல்பட்டிலிருந்து செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில்
மொத்தம் 32 சேவைகள்

 Month
Dates of service from Coimbatore
Total
Dates of service from Chingleput
Total
Dec ‘16
19, 21, 26, 28
4
20, 22, 27, 29
4
Jan ‘17
2, 4, 9,11, 16, 18, 23, 25,30
9
3, 5, 10, 12, 17, 19, 24, 26, 31
9
Feb’17
1, 6, 8
3
2, 7, 9
3

Total services
16
Total Services
16


T.No.06068
¯
Station
­
T.No.06067
19.30
(d)
COIMBATORE
(a)
03.30
20.15/ 20.17
(a/d)
TIRUPPUR
(a/d)
02.15/02.17
21.00/21.15
(a/d)
ERODE
(a/d)
01.30/ 01.35
22.20/ 22.40
(a/d)
SALEM
(a/d)
00.01/00.30
23.57/ 23.59
(a/d)
ATTUR
(a/d)
22.22/ 22.24
00.28/ 00.30
(a/d)
CHINNASALEM
(a/d)
21.53/ 21.55
01.30/ 01.50
(a/d)
Vriddhachalam
(a/d)
20.35/ 21.00                   
02.25/ 02.30
(a/d)
Villupuram
(a/d)
19.45/ 19.50
03.30/03.35
(a/d)
Melmaruvathur
(a/d)
18.30/ 18.35
04.15
(a)
Chengalpattu
(d)
18.00

ஈரோடு சென்னை எழும்பூர் பகல் நேர சிறப்பு ரயில்களின் பெட்டிகள் மற்றும் இயக்க நாட்கள் மாற்றம்


ஈரோடு சென்னை எழும்பூர் பகல் நேர சிறப்பு ரயில்களின் பெட்டிகள் மற்றும் இயக்க நாட்கள் கீழ்க்கண்டவாறு மாற்றம் செய்யப்படுகின்றன.


17.12.2016 முதல் 31.12.2016 வரை இந்த ரயில்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஈரோடு சென்னை எழும்பூர் இடையே, அதாவது 17/12, 18/12, 24/12, 25/12 & 31.12.2016 தேதிகளில் மட்டும் இயக்கப்படும். ரயில் பெட்டிகளின் அமைப்பு 6 முன்பதிவு பெட்டிகள், 4 முன்பதிவற்ற பெட்டிகள், 2 லக்கேஜ் பெட்டிகள் (மொத்தம் 12 பெட்டிகள்) என்பதற்கு பதிலாக 13 முன்பதிவற்ற பெட்டிகள், 2 லக்கேஜ் பெட்டிகள் (மொத்தம் 15 பெட்டிகள்) என மாற்றப்பட்டுள்ளது.