Wednesday 8 November 2017

கோயம்புத்தூர் சென்னை சென்ட்ரல் சேரன் விரைவு ரயில் பெட்டிகள் அதிநவீன எல்.எச்.பி. பெட்டிகளாக மாற்றம்



இந்திய ரயில்வே ரயில்பயணத்தை பாதுகாப்பானதாகவும், சுகமாகவும் மாற்ற எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அனைத்து ரயில்பெட்டிகளும் பாதுகாப்பான எல்.எச்.பி ரயில்பெட்டிகளாக மாற்றப்பட்டு வருகின்றன. சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா அவர்களின் தொடர் முயற்சி காரணமாக வரும் 10.11.2017 முதல் கோயம்புத்தூர் சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் சேரன் விரைவு ரயிலின் பெட்டிகள் அதிநவீன மற்றும் பாதுகாப்பான எல்.எச்.பி (லிங்க் ஹாப்மான் புஷ் அல்ஸ்தாம்) ரயில் பெட்டிகளாக மாற்றப்படுகின்றன. இந்த நவீன ரயில்பெட்டிகள் பொறுத்தப்பட்ட சேரன் விரைவு ரயில் கோயம்புத்தூரில் இருந்து 10.11.2017 முதலும், சென்னை சென்ட்ரலில் இருந்து 11.11.2017 முதலும் இயக்கப்படும். இந்த ரயில்களின் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள இடவசதி கீழ்க்கண்டவாறு.

Composition of coaches
Existing No. of Conventional Coaches
Existing Capacity per coach 
No. of LHB Coaches
Increased capacity per coach
Unreserved General Second Class
03
270
03
300
Luggage Cum Brake Van
02
60
02
(Power Cars)
00
3 Tier 2nd  Class Sleeper
11
792
10
800
AC 3 Tier
05
320
05
360
AC 2 Tier
01
320
01
54
AC 1st class-cum-2 Tier Combo
01
20+10
01
28+10
TOTAL
23
1518
22
1552














அதிகரிக்கப்பட்ட பயணிகள் எண்ணிக்கை மட்டுமன்றி, இந்த ரயில்களில் பயோடாய்லெட்கள், மேம்படுத்தப்பட்ட நவீன ஸ்பிரிங் பொறுத்தப்பட்ட போகிகள், விபத்துக்களின் போது ஒரு ரயில்பெட்டி மற்ற ரயில்பெட்டியின் மீது மோதி பெரும் சேதம் விளைவிப்பதை தவிர்க்கும் வகையில் சென்டர் பப்பர் கப்ளர் இணைப்பு, தீப்பிடிக்காத பிட்டிங்குகள் மற்றும் ரயில்களின் உள்ளே சப்தம் கேட்பதை தவிர்க்கும் வகையில் இன்சுலேஷன் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் பயணிகள் வசதிக்காக பெரிய ஜன்னல்கள், கால் வழுக்காத பிவிசி தரைவிரிப்புகள், ரயில்பெட்டிகள் இடையே தானியங்கி கதவுகள் போன்ற மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 22 ரயில்பெட்டிகள் கொண்ட 2 ரேக்குகள் சேலம் கோட்டத்திற்கு சேரன் விரைவு ரயிலுக்காக வந்துள்ளன. இவை கோயம்புத்தூரில் உள்ள ரயில்பெட்டி பணிமனையில் பராமரிக்கப்படும். 

No comments:

Post a Comment