Friday, 16 February 2018

இந்திய ரயில்வேயின் பசுமை நடவடிக்கை- முக்கிய ரயில்நிலையங்களில் இருந்து புறப்படும் ரயில்களில் ரயில்பெட்டிகளில் முன்பதிவுப் பட்டியல் ஒட்டும் பணி நிறுத்தம்


தேர்ந்தெடுக்கப்பட்ட சில ரயில்நிலையங்களில் சோதனை அடிப்படையில் ரயில்பெட்டிகளில் முன்பதிவு பட்டியல் ஒட்டும் பணி நிறுத்தப்பட்டது. இத்தகு பசுமை நடவடிக்கை தற்போது இந்திய ரயில்வேயில்  உள்ள ஏ1, ஏ மற்றும் பி பிரிவு ரயில்நிலையங்களுக்கும் மார்ச் 1ம் தேதி முதல் விரிவு படுத்தப்படுகிறது. சேலம் கோட்டத்தின் கோயம்புத்தூர் ரயில் நிலையம் ஏ1 பிரிவின் கீழும், சேலம், மேட்டுப்பாளையம், ஈரோடு, கரூர், மற்றும் திருப்பூர் ரயில்நிலையங்கள் ஏ பிரிவின் கீழும் வருகின்றன. பி பிரிவு ரயில்நிலையம் சேலம் கோட்டத்தில் இல்லை.  இந்த பசுமை நடவடிக்கை மூலம், தெற்கு ரயில்வேயில் மட்டும் ஆண்டொன்றுக்கு 28 டன் பேப்பர் சேமிக்கப்படுவதுடன் ரூ.1,70 லட்சம் மிச்சமாகிறது.   

இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் ரயில்பயணிகளுக்கு, குறிப்பாக வயது முதிர்ந்த பயணிகளுக்கு உதவ, அந்த ரயில்நிலையங்களின் முக்கிய பகுதிகளில் முன்பதிவுப்பயணிகள் பட்டியல் ஒட்டப்படுவதுடன், பயணச்சீட்டு பரிசோதகர்களிடம் இருக்கும் பயணிகள் பட்டியல் மூலமாகவும், பயணிகள் தங்களது முன்பதிவு இருக்கையின் எண்ணை அறிந்து கொள்ளலாம்.

இது தவிர, குறுஞ்செய்தி மூலம் முன்பதிவு பற்றிய தகவல்கள் பயணிகளுக்கு அனுப்பட்டு வருவதுடன், இந்திய ரயில்வேயின் www.indianrailways.gov.in மற்றும் www.irctc.co.in இணையதளங்கள் மூலமாகவும், ரயில்வே தகவல் உதவி தொலைபேசி எண், 139க்கு தொலைபேசி அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி அனுப்பி வேண்டிய தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

Friday, 26 January 2018

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் 69வது குடியரசு தின விழா





















தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் 69வது குடியரசு தின விழா இன்று (26.01.2018விமரிசையாக கொண்டாடப்பட்டது.  சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரி சங்கர் வர்மா அவர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து ரயில்வே பாதுகாப்புப்படை வீர்ர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

விழாவில் பேசுகையில், திரு. வர்மா, சாதாரண குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்க இந்திய அரசியலமைப்பு சட்டம் இந்த நாளில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதை நினைவு கூர்ந்தார். தெற்கு ரயில்வே பொது மேலாளர் திரு ஆர்.கே.குலசிரேஷ்டா அவர்களது குடியரசு தின செய்தியையும் அவர் விழாவில் வாசித்தார் (பொது மேலாளரின் உரையின் ஆங்கில மூலம் இந்த செய்திகுறிப்பின் இறுதியில் தரப்பட்டுள்ளது.)

ரயில்வே பாதுகாப்பு படையின் கமாண்டோக்கள் பங்கேற்ற  சாகச நிகழ்ச்சி, ஈரோடு மற்றும் சேலத்தில் உள்ள ரயில்வே பள்ளிகளின் மாணவர்கள் மற்றும் சேலம் கோட்ட ஊழியர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றன.  விழாவில், சேலம் கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் திரு சந்திரபால், கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையர் திரு பொன்ராஜ், தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் நரசிம்மம், கோட்ட முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளர் பெருமாள் நந்தலால்,  கோட்ட முதுநிலை வணிக மேலாளர் திரு விஜுவின். கோட்ட முதுநிலை நிதி ஆலோசகர் டாக்டர் உமாமஹேஸ்வரி, கோட்ட பணியாளர் நல அதிகாரி திரு திருமுருகன், மற்றும் இதர கோட்ட அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். 

பின்னர் சேலம் ரயில்நிலைய நடைமேடை எண்.4ல் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே பாதுகாப்புப்படை ஆய்வாளர் அலுவலகத்தையும், சேலம் ரயில்நிலைய மேற்குப்புறத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே பாதுகாப்புப்படை வீர்ர்கள் மற்றும் தமிழக அரசு ரயில்வே காவலர் படை வீர்ர்கள் ஓய்வு அறைகளையும் திரு ஹரிசங்கர் வர்மா, சேலம் கோட்ட அதிகாரிகள் முன்னிலையில் திறந்து வைத்தார். ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் தமிழக அரசு ரயில்வே காவலர் படையினருக்கு தேவையான அனைத்து வசதி மேம்பாடுகளும் செய்து தரப்படும் என்று அவர் சொன்னார்.
                                   
தெற்கு ரயில்வே பொது மேலாளரின் குடியரசு தின உரை (ஆங்கிலத்தில்)

General Manager’s Speech-69th Republic Day-26th January 2018

My colleague officers from Headquarters and Divisions and their families, Retired Officers present here, Supervisors and staff and their families, Representatives of Press and Media, Representatives of recognised Trade Union & Associations,  Ladies & Gentlemen and My dear children.

Good morning to all of you on the occasion of 69th Republic Day of our Nation today.  It is my privilege and pleasure to extend my best wishes and greetings to all of you present here and your families.

Just as our Constitution preserves secular, sovereign democratic character of our country, Indian Railway helps to nurture national integrity, fulfilling the transportation needs across length and breadth of our country without any bias of caste, creed, region or religion.          

On this vibrant occasion, I would like to inform all of you certain highlights of Southern Railway..

Upto Dec.’17 this year, Southern Railway’s gross earnings is at Rs.5422.09 crores and our operating ratio is 168.07%.  I am happy to inform you that we are operating 63% more number of special trains than last year apart from regular trains (i.e. 1974 special trains).  We are also planning to run another 270 more special trains, time tabled summer specials and augment extra coaches during demand time this year.  We also have provided 25% more traffic blocks to attend safety track works in this year. In-spite of that, we could able to maintain 83.7% punctuality so far. 


I would also like to mention  few important passenger facilities provided like Emergency Medical centres which have been set up at 23 stations, Child Helpline centres at 6 stations, Differently-abled friendly measures at 71 stations, ‘Wi-Fi’ at 23 stations, 84 Escalators and 61 Lifts commissioned over Southern Railway.  These passenger friendly measures will be provided in many more stations in the coming year.

I would also like to highlight the fact that all 735 stations will be provided with 100% LEDs.

On safety front, I am happy to mention that all unmanned level crossings will be eliminated in A, B, C routes before March 2018. This year, SouthernRailway has already eliminated 52 unmanned level crossings and constructed 15 Road Over Bridges and Road Under Bridges. We are actively working on removing all unmanned level crossing in Southern Railway by September 2018.

As per the vision of our Hon’ble Prime Minister Shri Narendra Modiji towards clean India, Southern Railway accords highest priority for cleanliness.  I am very glad to inform you that Kozhikode station in Southern Railway ranked No.1 by the travellers in terms of cleanliness in the survey conducted by IXIGO. 

We are also giving utmost priority in the passenger comfort.  I am glad to inform that we have attached two Ánubhuti Coaches’ in Shatabdi Expresses which increased the passenger comfort with modern facilities. New LHB design coaches have also been introduced in 12 trains and few more trains will be introduced this year.  Bio-toilets in all coaches will be provided by December 2018.

We are also concerned about the Safety and Security of the passengers especially women passengers. As part of enhancing security, Southern Railway have implemented Integrated Security System at 14 important Railway Stations by way of providing CCTVs.  Under Nirbhaya Fund, CCTVs are also to be provided in the 136  A1, A, B, C category stations including Suburban Railway Stations and as a trial measure, work has been completed in Nungambakkam Railway station.

On the part of Energy saving, Southern Railway did a very good job to get First Prize  in National Energy Conservation Award by Ministry of Power for the year 2017 for Central Workshop, Ponmalai.

During the recent bus strike, Southern Railway has taken swift action in running more EMUs for the benefit of stranded passengers which was widely appreciated by Press and Public.

As far as projects are concerned, Southern Railway has spent so far Rs.299 crores on Doubling, Rs.294 crores on Gauge Conversion, Rs.52 crores for New Lines and 201 crores for Road Over Bridges/Road Under Bridges. 

We have recently commissioned the Tambaram Coaching Terminal which will ease the congestion at Egmore.
This year, Madurai-Chennai route will be fully doubled. Edamann-New Aryankavu (21 km.) gauge conversion will get completed and it will connect Kollam/Trivandrum to Chennai via Madurai and Sengottai..    

The Three prestigious doubling with electrification rail development projects of Tamil Nadu and Kerala Region viz.  Madurai-Vanchi Maniyachi –Ttutiocorin , Vanchi Maniyachchi – Tirunelveli – Nagercoil section  and Thiruvannathapuram Central – Kanniyakumari section have been sanctioned and Foundation Stone was laid by Hon’ble  Minister of State of Railways Shri Rajen  Gohain on 23.01.18.

It is pertinent to mention here that Southern Railway stood 1st in reduction of public complaints this year. 

All these achievements are possible because of the dedicated and hardworking staff like all of you.  I am happy to state that staff facilitation centres have started to dispose off grievances speedily and 87 grievance Adalats and   pension adalats have been conducted for the benefit of staff and retired employees.   

We are also taking care of our employees by way of providing excellent health care.  Current year as per the order of Railway Board, Annual Wellness check up has been organised for all employees and I am happy to note that so far 38600 employees have been examined.

On this occasion, I  congratulate Shri Sathishkumar who won Gold medal in Weightlifting in Australia and also represented World Weightlifting Championship 2017 at USA.  I also congratulate Ms. Tintu Luka who won Gold in 800m in Kazakisthan and won silver in 800m in Asian Grand Prix in April 2017 and congratulate all sports persons of Southern Railway who have represented our nation in various international events.

Our trade union has been a major source of strength and support in every  achievement of Southern Railway.  I would like to sincerely thank for their support and extend my best wishes for them.

My best wishes for the President of SRWWO and all their Members for their outstanding work for the staff welfare related activities.

I would also like to convey my greetings and wishes to all associations for their support.

On this occasion, I thank and congratulate each and every Officer, Supervisor and staff of Southern Railway for their wholehearted support and co-operation and I wish them all and their families a bright future and good luck in all their endeavours on this republic day.
Thank you,

‘JAI HIND’

Friday, 5 January 2018

01.02.2018 முதல் 31 நாட்களுக்கு கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ள நீலகிரி விரைவு ரயிலில் முன்பதிவு செய்த பயணிகள் வசதிக்காக கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் இடையே இலவச பேருந்து வசதி

 
மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் நடைமேடைகளின் நீளத்தை 23 ரயில்பெட்டிகள் நிற்கும் அளவுக்கு நீட்டிப்பது தொடர்பான பணிகளுக்காக 01.02.2018 முதல் 03.03.2018வரையிலான 31 நாட்களுக்கு ரயில் எண்.12671/12672 சென்னை சென்ட்ரல் மேட்டுப்பாளையம் இடையிலான நீலகிரி விரைவு ரயில் கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளதால், கோயம்புத்தூரில் வந்து இறங்கி மேட்டுப்பாளையம் செல்ல வேண்டிய மற்றும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து நீலகிரி விரைவு ரயிலில் பயணம் செய்துள்ள முன்பதிவு செய்துள்ள பயணிகளின் வசதிக்காக சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா அவர்களின் உத்தரவின் பேரில் சேலம் கோட்ட வணிகவியல் பிரிவு கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் இடையே இலவச பேருந்து வசதி ஏற்பாடு செய்துள்ளது. இந்த பேருந்துகளில் முன்பதிவு பயணச்சீட்டு உள்ள பயணிகள் மட்டுமே பயணம் செய்ய இயலும். இதற்காக தனிக்கட்டணம் ஏதும் அவர்கள் செலுத்த வேண்டியது இல்லை. இது குறித்து உதவி தேவைப்படும் பயணிகள் கோயம்புத்தூர் ரயில் நிலைய உதவி வணிக மேலாளர் அவர்களை 96009 56236 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நடைமேடைகளை நீட்டிப்பதன் மூலம் தற்போது நீலகரி ரயிலின் பெட்டிகளின் ஒரு பகுதி கோயம்புத்தூரில் நிறுத்த வேண்டிய தேவை இருக்காது. அனைத்துப் பெட்டிகளும் மேட்டுப்பாளையம் வரை சென்று திரும்பும் என்பது குறிப்பிடத் தக்கது. 

Friday, 29 December 2017

27 மணி நேரம் தொடர்ந்து ஊழியர் குறை கேட்புக் கூட்டம் நடத்தியது தெற்கு ரயில்வே சேலம் கோட்டம்




ரயில்வே ஊழியர்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றிற்கு தீர்வு காணவும், ரயில்வேயை மேம்படுத்த அவர்களது கருத்துக்களை கேட்கவும், தெற்கு ரயில்வே சேலம் கோட்ட  நிர்வாகம் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவற்றிற்கு தீர்வு காண்பது வழக்கம்.

2017ம் ஆண்டுக்கான ஊழியர் குறை கேட்புக்கூட்டம் 28.12.2017 காலை 11 மணிக்கு துவங்கி 29.12.2017 மதியம் 2.30 மணி வரை சேரலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா அவர்கள் தலைமையில் சேலம் கோட்ட தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் கோட்டச் செயலாளர் திரு எம். கோவிந்தன் அவர்கள் மற்றும்  தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் இதர உறுப்பினர்களுடன் கிட்டத்தட்ட 27 மணி நேரம் நடத்தப்பட்டது. இதில் சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் திரு சந்திரபால், சேலம் கோட்ட முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளர் திரு பெருமாள் நந்தலால். கோட்ட முதுநிலை நிதி மேலாளர் டாக்டர் உமா மகேஸ்வரி, முதுநிலை வணிக மேலாளர் திரு விஜுவின், முதுநிலை மின்பொறியாளர்கள் திரு எம்.பிரபாகரன், திரு நசீர் அகமது, கோட்ட பணியாளர் நல அலுவலர் திரு எஸ். திருமுருகன் மற்றும் இதர சேலம் கோட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


சேலம் மருத்துவக்கூடத்தை கோட்ட துணை முதன்மை மருத்துவ மனையாக மேம்படுத்துதல், சேலத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைத்தல், சேலம் கோட்ட ரயில்வே குடியிருப்புகளில் பூங்காக்கள் அமைத்தல், பழைமையான இடிந்து விழும் நிலையில் உள்ள குடியிருப்புக்களை இடித்து விட்டு அந்த இடத்தில் புதிய அடுக்குமாடி குடியிருப்புக்கள் கட்டுதல், அனைத்து ஊழியர் குடியிருப்புக்களுக்கும் இலவச எல்ஈடி குழல் விளக்குகள் வழங்குதல், சுத்திகரிக்கப்பட்ட ஆர்ஓ குடிநீரை அனைத்து அலுவலகங்களுக்கும் ரயில்நிலையங்களுக்கும் வழங்குதல், பெண் ஊழியர்களுக்கு உடைமாற்றும் அறை இல்லாத இடங்களில் அத்தகு வசதியை நிறுவுதல் உள்ளிட்ட 420 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றுள் சேலம் ரயில்வே  கோட்ட மேலாளரின் அதிகாரத்திற்கு உட்பட்டு செய்யக்கூடிய 412 கோரிக்கைளின் மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு திரு வர்மா ஆணை பிறப்பித்தார். கொள்கை முடிவு சம்பந்தப்பட்ட 8 கோரிக்கைகளுக்கு தெற்கு ரயில்வே தலைமையகத்தை அணுகுமாறு தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார். தங்களது பெரும்பான்மையான கோரிக்கைகள் ஏற்கப்பட்டது குறித்து சேலம் கோட்ட தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் கோட்டச் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.  

Friday, 15 December 2017

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் 2017ம் ஆண்டுக்கான ஓய்வூதியர் குறை தீர்ப்பு மன்றம்

 
DRM addressing the gathering
 Sri S. Thirumurugan, DPO welcoming the gathering
Pensioners and beneficiaries gathered in the Adalat

இந்திய ரயில்வே ஓய்வூதியம் பெறுவோரின் குறைகளை தீர்ப்பதற்கு ஆண்டில் இருமுறை குறைதீர்ப்பு மன்றம் நடத்தப்பட்டு வருகிறது. 2017ம் ஆண்டிற்கான ஓய்வூதியர் குறை தீர்ப்பு மன்றம் இன்று (15.12.2017) தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அலுவலகத்தில் உள்ள பன்னோக்கு கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது. இம் மன்றத்தில் சேலம் ரயில்வே கோட்ட  மேலாளர் திரு. ஹரி சங்கர் வர்மா தலைமை ஏற்றார்.  62ரயில்வே ஓய்வூதியர்கள் மற்றும் பயனாளிகள் இந்த மன்றத்தில் கலந்து கொண்டு தங்களது மனுக்களை சமர்ப்பித்தனர்.  மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நிறுவனங்களின் நிலைக்குழுவின் உறுப்பினர்கள் ஓய்வூதியர்களுக்கு உதவ அழைக்கப்பட்டிருந்தனர். சேலம்  கோட்ட பணியாளர் நல அலுவலர் திரு எஸ். திருமுருகன்மற்றும் இதர கோட்ட  அதிகாரிகள் இந்த  மன்றத்தில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசுகையில், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. ஹரி சங்கர் வர்மா, இந்திய ரயில்வேயில் குறிப்பாக சேலம் கோட்டத்தில் பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களின் நலனில் முழு கவனம் செலுத்தி அவர்களது குறை தீர்க்க அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இதற்கு தேவையான கவனம் செலுத்தி வரும் சேலம் கோட்ட பணியாளர் பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை பாராட்டுவதாகவும் தெரிவித்தார். 

மொத்தம் 62 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டதில், 35 மனுக்கள் அனுமதிக்கப்பட்டு, 48,05,333 ரூபாய் நிவாரணமாக வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.  இதர மனுக்கள் நடைமுறையில் உள்ள விதிகளுக்கு புறம்பாக இருந்ததாலும்  போதிய ஆவணங்கள் இல்லாததாலும், பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள இயலவில்லை.


குறை தீர்ப்பு மன்றத்தில் பங்கேற்ற ஓய்வூதியர்கள் மற்றும் பயனாளிகள் சேலம் கோட்ட நிர்வாகம் தங்களது குறைகளை கேட்டு அவற்றை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுத்து வருவது குறித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். 

Wednesday, 13 December 2017

தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் சேலம் கிழக்கு ரயில்வே காலனியில் இலவச எல்ஈடி குழல் விளக்குகள் விநியோகம் துவக்கம்







ரயில்வே அமைச்சகம் மின் சேமிப்புக்காக குறைந்த அளவில் மின்சக்தி உபயோகிக்கும் உபகரணங்கள் மற்றும் காற்றாலை சூரிய மின்சக்தி அமைப்பு போன்ற மறுசுழற்சி மின்தயாரிப்பு உபகரணங்களை நிறுவுவதன் மூலம் இந்திய ரயில்வேயை மின்சேமிப்பில் முன்னணி நிறுவனமாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சேலம் கோட்டம் சார்பில் மின் சேமிப்பு பற்றி ரயில் பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலமும், சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவுவதன் மூலமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலத்தில் உள்ள ரயில்வே ஊழியர் குடியிருப்புகளில் உள்ள சாதாரண குழல் விளக்குகளை மாற்றி மின்சக்தி சேமிக்கும் எல்ஈடி குழல்விளக்குகளை இலவசமாக வழங்க துவக்கியுள்ளது. இதற்கு முன்னர் போத்தனூர், கோயம்புத்தூர் மற்றும் கரூரில் ஒரு ரயில்வே குடியிருப்புக்கு இரண்டு எல்ஈடி குழல் விளக்குகள் வீதம் 725 குடியிருப்புக்களில் 1450 எல்ஈடி குழல் விளக்குகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இன்று (13.12.2017) முதல் சேலத்தில் உள்ள 400 குடியிருப்புக்களுக்கு 800 எல்ஈடி குழல் விளக்குகள் விநியோகம் செய்யும் பணி தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் சேலம் கோட்ட செயலாளர் திரு எம். கோவிந்தன் அவர்கள் முன்னிலையில் துவக்கப்பட்டது. சாதாரண 52 வாட் குழல் விளக்குகளுடன் ஒப்பிடுகையில் இந்த எல்ஈடி குழல் விளக்குகள் 18 வாட் மின்சக்தியில் ஒளிதரக்கூடியவை.  இதனால், சேலத்தில் உள்ள ரயில்வே குடியிருப்புக்களில் மட்டும் சுமாராக 27,200 வாட் மின்சக்தி சேமிக்கப்படும்.


ஏற்கனவே, சேலம் கோட்டத்தில் சூரிய சக்தியில் மின்சக்தி தயாரிக்கும் அமைப்புகள் சேலம், மேட்டுப்பாளையம், திருப்பூர், சின்ன சேலம், ஆத்தூர், சேலம் டவுன், முக்காசாபரூர் போன்ற ரயில்நிலையங்களில் நிறுவப்பட்டுள்ளன.  சூரியசக்தியால் இயங்கும்  வாட்டர்ஹீட்டர்கள் அனைத்து முக்கிய ரயில்நிலையங்களிலும் அமைக்கப்பட்டுள்ளதுடன், கோயம்புத்தூர் மயிலாடுதுறை இடையே இயங்கும் ஜனசதாப்தி ரயிலில் 6 பெட்டிகளின் மேற்கூரையில் சூரியமின்சக்தி தகடுகள் 20 லட்ச ரூபாய் செலவில் நிறுவப்பட்டு மின்சக்தி சேமிக்கப்பட உள்ளது. இத்தகு மின்சக்தி சேமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு சேலம் கோட்டத்தை சிறந்த மின்சக்தி சேமிப்பு கோட்டமாக மாற்ற பணியாற்றிவரும் சேலம் கோட்ட முதுநிலை மின்பொறியாளர் திரு நசீர் அகமது மற்றும் இதர மின்பிரிவு அதிகாரிகள், பணியாளர்களையும் சேலம் ரயில்வே கோட்ட  மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா பாராட்டினார்  

Thursday, 7 December 2017

சேலம் ரயில்நிலையத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயனுக்காக பேட்டரியால் இயங்கும் கார் சேவை அறிமுகம்




சேலம் ரயில்நிலையத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயனுக்காக பேட்டரியால் இயங்கும் கார் சேவைக்காக வெகு நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. ஆனால் இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்ட போது, இலவச சேவை வழங்க யாரும் விண்ணப்பிக்கவில்லை. எனவே, ரயிலில் வந்து இறங்கும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மின்தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டு உள்ள இடங்களுக்கு போகவும், அது போல, அத்தகு இடங்களில் இருந்து ரயில் பெட்டிகள் உள்ள இடத்திற்கு செல்லவும் உதவும் வகையில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா அவர்கள் தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்துடன் கலந்து ஆலோசித்து கட்டண அடிப்படையிலான பேட்டரியால் இயங்கும் கார் சேவையை துவக்க ஆணையிட்டார். 

அதன்படி சேலம் ரயில்நிலையத்தில் நடைமேடை எண், 3 மற்றும் 4ல் பேட்டரியால் இயங்கும் கார் சேவை சேலம் கோட்ட வணிக மேலாளர் திரு. கே. மாது அவர்களால் சேலம் கோட்ட உதவி வணிக மேலாளர் திரு எம். ஷாஜஹான் மற்றும் சேலம் ரயில் நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார்.   இந்த சேவைக்காக சென்னையை சேர்ந்த ஷட்டில் கார் நிறுவனத்துடன் 5 வருட காலத்துக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி ஒப்பந்ததாரர் பேட்டரியால் இயங்கும் காருக்கான பராமரிப்பு, இயக்குநர் சம்பளம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு பயணிக்கு ரூ. 10 என்ற வகையில் கட்டணம் வசூலித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது.  மூத்த குடிமக்கள், உடல் நலம் குன்றிய பயணிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களின் வசதிக்காக துவக்கப்பட்டுள்ள இந்த பேட்டரியால் இயங்கும் காரில் ஒரு நேரத்தில் 4 பேர் பயணிக்கலாம்.  தங்களது கைப்பைகள் தவிர மற்ற பெட்டிகளை ஏற்றிச் செல்ல அனுமதி இல்லை.  இந்த பேட்டரியால் இயங்கும் கார் சேவையை உபயோகிக்க விரும்பும் பயணிகள் சேலம் ரயில்நிலையத்தில் 08939806986 என்ற எண்ணை அழைக்க வேண்டும். வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் வழங்கப்படும் இந்த கார் சேவை ஜிபிஎஸ் மூலமாக கண்காணிக்கப்படும்.


இது குறித்து பேசுகையில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா இத்தகு சேவை விரைவில் ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ரயில்நிலையங்களுக்கு விரிவு படுத்தப்படும் என்றும் பயணிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.