தேர்ந்தெடுக்கப்பட்ட
சில ரயில்நிலையங்களில் சோதனை அடிப்படையில் ரயில்பெட்டிகளில் முன்பதிவு பட்டியல்
ஒட்டும் பணி நிறுத்தப்பட்டது. இத்தகு பசுமை நடவடிக்கை தற்போது இந்திய
ரயில்வேயில் உள்ள ஏ1, ஏ மற்றும் பி பிரிவு
ரயில்நிலையங்களுக்கும் மார்ச் 1ம் தேதி முதல் விரிவு படுத்தப்படுகிறது. சேலம் கோட்டத்தின்
கோயம்புத்தூர் ரயில் நிலையம் ஏ1 பிரிவின் கீழும், சேலம், மேட்டுப்பாளையம், ஈரோடு,
கரூர், மற்றும் திருப்பூர் ரயில்நிலையங்கள் ஏ பிரிவின் கீழும் வருகின்றன. பி
பிரிவு ரயில்நிலையம் சேலம் கோட்டத்தில் இல்லை. இந்த பசுமை நடவடிக்கை மூலம், தெற்கு ரயில்வேயில்
மட்டும் ஆண்டொன்றுக்கு 28 டன் பேப்பர் சேமிக்கப்படுவதுடன் ரூ.1,70 லட்சம்
மிச்சமாகிறது.
இதனால் எந்த
பாதிப்பும் ஏற்படாத வகையில் ரயில்பயணிகளுக்கு, குறிப்பாக வயது முதிர்ந்த பயணிகளுக்கு
உதவ, அந்த ரயில்நிலையங்களின் முக்கிய பகுதிகளில் முன்பதிவுப்பயணிகள் பட்டியல்
ஒட்டப்படுவதுடன், பயணச்சீட்டு பரிசோதகர்களிடம் இருக்கும் பயணிகள் பட்டியல்
மூலமாகவும், பயணிகள் தங்களது முன்பதிவு இருக்கையின் எண்ணை அறிந்து கொள்ளலாம்.
இது
தவிர, குறுஞ்செய்தி மூலம் முன்பதிவு பற்றிய தகவல்கள் பயணிகளுக்கு அனுப்பட்டு
வருவதுடன், இந்திய ரயில்வேயின் www.indianrailways.gov.in மற்றும் www.irctc.co.in இணையதளங்கள்
மூலமாகவும், ரயில்வே தகவல் உதவி தொலைபேசி எண், 139க்கு தொலைபேசி அழைப்பு மற்றும்
குறுஞ்செய்தி அனுப்பி வேண்டிய தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment