ரயில்தட
விபத்துக்களை குறைக்க இந்திய ரயில்வே மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு
பகுதியாக, கோயம்புத்தூர் பீளமேடு மற்றும் வடகோயம்புத்தூர் இடையே உள்ள ஆவாரம்பாளையம்
லெவல் கிராசிங் 07.12.2017 முதல் மூடப்பட்டு மேம்பாலம் கட்டும் பணி துவக்கப்பட உள்ளது. சத்தி ரோடு மற்றும் புது சித்தாப்பூர் ரோடு வழியாக
மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காக இந்திய ரயில்வே மற்றும் தமிழக அரசின்
நெடுஞ்சாலைத்துறை இணைந்து நிதி ஒதுக்கீடு 26
கோடி ரூபாய் செய்துள்ளன. மேம்பாலப் பணிகள் 30.09.2018க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளன.
இரு வழிப்பாதையாக அமையும் இம்மேம்பாலத்தின் அகலம் 12 மீட்டராகவும், நீளம் கணபதி முனையில்
450 மீட்டரும், காந்திபுரம் முனையில் 320 மீட்டரும் இருக்கும். பொதுமக்கள் மேற்கண்ட
பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதை கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Need of the hour, good move hope no held-up Midway...
ReplyDeletePhew ! Finally.
ReplyDelete