Sunday, 21 May 2017

உதகை கேட்டியில் தெற்கு ரயில்வேயின் பொதுமக்கள் பாதுகாப்புப் படையின் 62வது பயிற்சி முகாம்


1962ம் ஆண்டு இந்தியாவின் மீதான சீன அத்துமீறலின் போது நிறுவப்பட்ட பொதுமக்கள் பாதுகாப்புப் படை அரசு ஊழியர்களுக்கு பொதுமக்கள் மற்றும் பொது சொத்துக்களை பாதுகாப்பதற்காக பயிற்சி அளித்து வருகிறதுஅந்நிய தாக்குதல் மற்றும் இயற்கை சீற்றங்களின் போது உயிர்ச்சேதம்  இல்லாமல் காப்பது, பொது சொத்துக்களுக்கு சேதம் இல்லாமல் காப்பது, மற்றும் தொழில் நிறுவனங்களின் உற்பத்தியை தொடர்ந்து மேற்கொள்ள உதவுவது, போன்ற சேவைகளில் இந்த அமைப்பின் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்ரயில்வே ஒரு முக்கியமான பொது சேவையாக இருப்பதால், ரயில்வேயில் அத்தகு அந்நிய தாக்குதல் மற்றும் இயற்கை சீற்றங்களின் போது சிறப்பாக செயல்பட்டு, ரயில்வே ஊழியர்கள் மற்றும் சொத்துக்கள், பயணிகள் ஆகியோரை காப்பதற்கு ரயில்வேயின் பொதுமக்கள் பாதுகாப்புப் படை பணியாற்றி வருகிறது.

மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் இப்படையில் தெற்கு ரயில்வே பிரிவுக்கு துணைப் பொதுமேலாளர் தலைமை இயக்குநராக உள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும், ரயில்வே ஊழியர்களுக்கு பயிற்சி முகாமை வெவ்வேறு இடங்களில் இந்த அமைப்பு நடத்தி வருகிறது. இதன் 82வது பயிற்சி முகாமை, உதகை கேத்தி ரயில் நிலையைம் பின்புறம் உள்ள சாரணசாரணியர் கட்டிடத்தில் இன்று காலை சுமார் 10.30 மணி அளவில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா அவர்கள் துவக்கி வைக்கிறார்கள். தெற்கு ரயில்வே பொதுமக்கள் பாதுகாப்புப் படை முன்னாள் தலைமை இயக்குநர் திரு. பி. இளங்கோவன், தெற்கு ரயில்வே பொதுமக்கள் பாதுகாப்புப் படை துணை இயக்குநர் மற்றும் தெற்கு ரயில்வே முதுநிலை துணைப் பொதுமேலாளர் திரு. ஆர். முரளி மற்றும் தெற்கு ரயில்வேயின் இதர அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்கின்றனர்இப்பயிற்சி முகாமிற்கு பொதுமகக்கள் பாதுகாப்புப் படையின் முதுநிலை ஆய்வாளர் திரு பி. ரகுநாதன் பயிற்சியாளராக இருப்பார்


தெற்கு ரயில்வேயின் பல்வேறு கோட்டங்களில் இருந்து சுமார் 130 புதிதாக பணியில் சேர்ந்த ரயில்தடப்பராமரிப்புப் பணியாளர்கள் பங்கேற்று, முதலுதவி, தீயணைப்பு மற்றும் இதர மீட்பு நடவடிக்கைகளில் பயிற்சி பெற உள்ளனர்

No comments:

Post a Comment