தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் 15.12.2017 அன்று காலை 10.30 மணிக்கு சேலம் கோட்ட பழைய கோட்ட மேலாளர் அலுவலகத்தில் உள்ள பன்னோக்கு கருத்தரங்க வளாகத்தில் ஓய்வூதியர் குறை தீர்ப்பு நாள் நடத்த உள்ளது. எனவே, ரயில்வே பணியில் இருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் இதர பயனாளிகள் தங்களுக்கு ஓய்வூதியம் குறித்து குறைகள் ஏதும் இருப்பின், அவற்றை கோட்ட பணியாளர் நல அலுவலர், சேலம் கோட்டம், தெற்கு ரயில்வே, சேலம் 636005, என்ற முகவரிக்கு 31.10.2017க்குள் முன்னதாகவே க டிதம் அனுப்பி தெரிவிக்கலாம். இந்த ஓய்வூதிய குறை தீர்ப்பு நாளன்று நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள குறைகள், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பான குறைகள். கருணை அடிப்படையிலான பணி வழங்குதல் சம்பந்தமான குறைகள், வாரிசு சான்றிதழ் மற்றும் காப்பாளர் தொடர்பான குறைகள், மற்றும் விதிகள் சம்பந்தப்பட்ட குறைகள் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் ஏற்கனவே நடைபெற்ற ஓய்வூதியர் குறைதீர்ப்பு மன்றங்களில் சமர்ப்பிக்கப்பட்டு திருப்திகரமாக பதிலளிக்கப்பட்ட குறைகளும் மறுபரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
No comments:
Post a Comment