Tuesday, 31 October 2017

தேசிய ஒருங்கிணைப்பு தினத்தை முன்னிட்டு தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் இன்று (31.10.2017) சேலத்தில் மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது










ஒவ்வொர் ஆண்டும் அக்டோபர் மாதம் 31ம் தேதி இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் தேசிய ஒருங்கிணைப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் இந்திய ரயில்வே சார்பில் நாடெங்கிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்று தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் உள்ள சேலம் ரயில்நிலையத்தில் இருந்து சேலம் கோட்ட அலுவலக வளாகம் வரை ஒருங்கிணைப்பு தின மாரத்தான் ஓட்டம்  நடைபெற்றது. சேலம் சோனா கல்லூரி, சேலம் செயின்ட் ஜோசப் மகளிர் பள்ளி, சேலம் ரயில்வே கோட்ட ரயில்வே பாதுகாப்ப்புப் படையினர் மற்றும் சேலம் கோட்ட அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட 100 பேருக்கும்  மேலானோர் கலந்து கொண்ட இந்த மாரத்தான் ஓட்டத்தை சேலம் சந்திப்பு ரயில்நிலையத்தில் இருந்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா, சேலம் கோட்ட மகளிர் நல அமைப்பின் தலைவி திருமதி அனிதா வர்மா, சேலம்  கோட்ட  முதுநிலை வணிக மேலாளர் திரு விஜுவின், சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் திரு பொன்ராஜ், சேலம் கோட்ட உதவி வணிக மேலாளர் திரு ஷாஜஹான், மற்றும் சேலம்  கோட்ட அதிகாரிகள், ஊழியர்கள் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  முன்னதாக அங்கு குழுமியிருந்தவர்களுக்கு தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை அவர் செய்து வைத்தார்.  அவர் பேசுகையில் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் ஒரே நாடாக ஆக முழுக்காரணம் சர்தார் வல்லபாய் படேல்தான் என்றும் தேச ஒருமைப்பாட்டுக்கு அவரது பங்களிப்பை ஒவ்வொரு இந்தியனும் நன்றியுடன் நினைவு கூர வேண்டும் என்றும் சொன்னார். 


இது போன்ற நிகழ்ச்சிகள் சேலம் கோட்டத்தின் ஈரோடு, திருப்பூர், கோயம்பத்தூர், மேட்டுப்பாளையம், கரூர் மற்றும் சேலம் டவுன் போன்ற ரயில்நிலையங்களிலும் பல்வேறு கோட்ட அதிகாரிகளின் தலைமையில் நடைபெற்றன. 

No comments:

Post a Comment