தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் 9 ஆண்டுகளுக்கு முன்பு
1.11.2007 அன்று துவக்கப்பட்டு தற்போது 10ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வேளையில்
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சிறப்பாக செயல் பட்டு ரயில் பயணிகள் மற்றும் இதர ரயில்
உபயோகிப்பாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது.
2015 நவம்பர் முதல் 2016 அக்டோபர் வரையிலான ஓராண்டு
காலத்தில் சேலம் கோட்டத்தின் வருவாய் கடந்த ஆண்டுடன் ஒப்பீட்டுடன் கீழே தரப்பட்டுள்ளது.
தொகை லட்ச ரூபாய்களில்
|
தொகை லட்ச ரூபாய்களில்
|
|
வருவாய் (நவம்பர் முதல் அக்டோபர் வரை)
|
2015-16
|
2014-15
|
ஏடிஎம்
|
54.69
|
61.35
|
உணவகங்கள்
|
3,07.88
|
3,08.29
|
சரக்கு போக்குவரத்து
|
54,43
|
61,28
|
மொத்த வருவாய்
|
620,18
|
610,07
|
சரக்கு மொத்தம்
மெட்ரிக் டன்களில்
|
7,74.02
|
7,46.72
|
சேலம் கோட்டத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் எண்ணிக்கை
(லட்சங்களில்)
|
3,61.32
|
3,74.77
|
இதர பயணச்சீட்டு வருவாய்
|
44,37
|
37,77
|
பார்சல்
|
19,78.19
|
21,90.5
|
வண்டி நிறுத்துமிடம் பார்க்கிங்
|
3,03.66
|
3,32.3
|
விளம்பர வருவாய்
|
3,43.31
|
5,43.11
|
தங்கும் அறைகள்
வருவாய்
|
54.18
|
44.84
|
இதர சில்லறை வருவாய்கள்
|
23,54
|
31,84
|
பயணச் சீட்டு பரிசோதனை மூலம் வருவாய்
|
5,53.94
|
4,75.69
|
நிகர வருவாய்
|
1287,67.19
|
1270,91.57
|
ஏடிஎம், உணவகம், சரக்கு
போக்குவரத்து, பார்சல், நிறுத்தக வருவாய் போன்ற வருவாய்கள் அனைத்து இந்திய ரயில்வேயிலும்
உள்ளது போலவே குறைவாக வருமானம் வந்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டில் பயணிகள் வசதி மேம்பாட்டிற்காக தெற்கு
ரயில்வே சேலம் கோட்டத்தின் பல்வேறு ரயில்நிலையங்களில் கீழ்க்கண்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன:
சேலம் ரயில்நிலையத்தில் நகரும் மின்படிக்கட்டுகள்
கரூர் ரயில்நிலையத்தில் புதிய பயணிகள் தங்கும் அறைகள்
சேலம் மற்றும் கோயம்புத்தூரில் குளிர்வசதி செய்யப்பட்ட
புதிய பயணிகள் காத்திருப்பு அறைகள்
சேலம் ரயில்நிலையம் அருகில் பல்நோக்கு வணிக வளாகம்
திருப்பூர் அருகே விஜயமங்கலம் மற்றும் தொட்டிப்பாளையம்
ரயில்நிலைய புதிய கட்டிடங்கள்
ஈரோடு சென்னை எழும்பூர் இடையிலான பகல் நேர விரைவு
ரயில்கள் உள்பட பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கம்
தற்போது கீழ்க்கண்டவாறு
பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடைபெற்று வருகின்றன.
சேலம் ரயில்நிலையத்திற்கான இரண்டாவது நுழைவு வாயிலுக்கான
ஆயத்தப் பணிகள் துவக்கப்பட்டு நடைமேம்பாலத்தை விரிவு படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
கோயம்புத்தூர் ரயில்நிலையத்தில் புதிய நகரும் படிக்கட்டுகள்
மற்றும் மின்தூக்கிகள், ஈரோடு ரயில் நிலையத்தில்
மின்தூக்கிகள் அமைக்கும் பணி
கோயம்புத்தூர் ரயில்நிலையத்தில் பல்லடுக்கு வாகனம்
நிறுத்தும் வசதிக்கான திட்டப்பணிகள்
மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தின் நடைமேடைகளை
24 ரயில்பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிப்பு பணிகள்
கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் தடத்தில் உள்ள துடியலூரில்
தமிழக அரசின் நிதிப்பங்களிப்புடன் புதிய ரயில்நிலைய கட்டிடம், மற்றும் பெரியநாயக்கன்
பாளையத்தில் தனியார் நிறுவன ஒத்துழைப்புடன் புதிய ரயில் நிலைய கட்டிடம் அமைக்கம் பணிகள்
சின்ன சேலம் கள்ளக்குறிச்சி இடையே தமிழக அரசின்
நிதிப்பங்களிப்புடன் புதிய அகல ரயில் பாதை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment