சேலம்
விருத்தாசலம் வழியிலான ரயில் எண்.06028/06027 ஈரோடு சென்னை எழும்பூர் இடை பகல் நேர
சிறப்பு விரைவு ரயில், பல்வேறு தரப்பில் இருந்து பெறப்பட்ட வேண்டுகோளை ஏற்றும்பயணிகள்
பெரும் அளவில் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டும், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு
ஹரிசங்கர் வர்மா அவர்கள் பரிந்துரைத்த படி, தெற்கு ரயில்வே இந்த ரயிலை 2016 டிசம்பர்
30ம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது. இந்த ரயில் வியாழன் மற்றும் சனி தவிர
வாரத்தின் 5 நாட்கள் இயக்கப்படும். இந்த ரயிலின் பெட்டிகள் அமைப்பு, கால அட்டவணை மற்றும்
நிறுத்தங்கள் முன்பு அறிவித்தபடியே இருக்கும்.
ரயில்வே
நிர்வாகம், இந்த ரயிலை தொடர்ந்து இயக்கவோ, அல்லது வழக்கமான ரயிலாக மாற்றவோ முடிவெடுக்க
உதவும் பொருட்டு, பயணிகள் இந்த சிறப்பு ரயில் நீட்டிப்பை பெருமளவில் பயன்படுத்திக்
கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment