தெற்கு ரயில்வே, சேலம் கோட்டம் துவக்கப்பட்டு
இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, கோயம்புத்தூர் ரயில்நிலையத்தில்
பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகம் அருகே, அனைத்து மகளிர் உதவி மையம் இன்று (01.11.2016) திறக்கப்பட்டுள்ளது.
இது போன்று இந்திய ரயில்வேயில் முதன் முறையாக தெற்கு ரயில்வேயில் 7 ரயில்
நிலையங்களில் மகளிர் உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த அனைத்து மகளிர் உதவி மையத்தில் பெண்
பயணிகளுக்கு தேவையான ரயில் பயணம் சம்பந்தப்பட்ட அனைத்து உதவிகளும் சேலம் கோட்ட
வணிகவியல் பிரிவு பெண் ஊழியர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப்படை பெண்
காவலர்களால் வழங்கப்படும். மேலும், பெண் பயணிகள் முன்னர் பணம் செலுத்தி பயணம்
செய்யும் ஆட்டோ வசதி மற்றும் அரசு ரயில்வே போலீசாரிடம் ஏதாவது புகார்செய்ய
விரும்பினால் அதற்கான வசதி ஆகியவைவும் செய்து தரப்படும். மேலும் பச்சிளம்
குழந்தைகளுக்கு பாலூட்ட விரும்பும் தாய்மார்களின் வசதிக்காக தனியாக பாலூட்டும்
அறையும் அமைக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தின் அனைத்து
முக்கிய ரயில்நிலையங்களிலும் இது போன்ற அனைத்து மகளிர் உதவி மையங்கள் விரைவில் திறக்க
ஏற்பாடு செய்யப்படும்.
No comments:
Post a Comment