ஜோலார்பேட்டை சேலம் இடையே ஜோலார்பேட்டை
ஈரோடு பயணிகள் ரயிலில் இன்று (24.10.2016) திடீர்
பயணச்சீட்டு பரிசோதனை சேலம் கோட்ட வணிகவியல் துறையின் ஒருங்கிணைப்பு மேலாளர் திரு விஜு
வின் அவர்கள் தலைமையில் சுமார் 20 வணிகவியல் துறை பயணச்சீட்டு பரிசோதகர்கள் மற்றும்
31 ரயில்வே பாதுகாப்புப் படையினர் கொண்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது. இதில் 55 பேர்
பயணச்சீட்டு இல்லாமல் பிடிபட்டனர். அவர்களிடம் 15,390 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இது போன்ற திடீர் பயணச்சீட்டு பரிசோதனைகள் சேலம்
கோட்டம் முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், பயணச்சீட்டு இல்லாமல் பயணம்
செய்வோர் இந்திய ரயில்வே சட்டம் பிரிவு 137 ன் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும்,
அவர்கள் சென்னையில் உள்ள ரயில்வே குற்றவியல் நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டு ஆறு மாதம்
வரை சிறைத்தண்டனையோ அல்லது 1000 ரூபாய் வரை அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக பெற்றுத்தரப்படும்
என்றும் வணிகவியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment