Thursday, 13 April 2017

சேலம் கோட்டம் தெற்கு ரயில்வேயில் சிறப்பாக செயலாற்றியமைக்காக 3 துறைகளில் விருதுகள் பெற்றது.


திரு ஹரிசங்கர் வர்மா பொறியியல் துறையில் சிறப்பான பணிக்கான கேடயத்தை திரு வசிஷ்டஜோஹிரி அவர்களிடமிருந்து பெறுகிறார்
திரு ஹரிசங்கர் வர்மா சிறப்பான பயணிகள் வசதிக்கான கேடயத்தை திரு வசிஷ்டஜோஹிரி அவர்களிடமிருந்து பெறுகிறார்
திரு ஜி.சுந்தர்ராவ்  சிறப்பான பராமரிக்கப்பட்ட பொருள்கிடங்குக்கான கேடயத்தை திரு வசிஷ்டஜோஹிரி அவர்களிடமிருந்து பெறுகிறார்
 சேலம் ரயில்நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பின் போது சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் திரு விஜுவின் அவர்கள்
 சேலம் ரயில்நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பின் போது சேலம் கோட்ட முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளர் திரு பெருமாள் நந்தலால் அவர்கள்
சேலம் ரயில்நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பின் போது சேலம் கோட்ட முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளர் திரு பெருமாள் நந்தலால் மற்றும் சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் திரு விஜுவின் அவர்கள் இதர அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுடன் 

ஒவ்வொரு ஆண்டும், தெற்கு ரயில்வேயில் நடைபெறும் ரயில்வே வார விழாவின் போது பொறியியல், வணிகவியல், பணியாளர் துறை போன்ற பல்வேறு துறைகளில் சிறப்பாக செயலாற்றிய கோட்டங்களுக்கு கேடயங்கள் வழங்கப்படுகின்றன.

2016-17ம் ஆண்டில் தெற்கு ரயில்வேயின் கோட்டங்களிடையே, பொறியியல் திறன், சிறப்பான பயணிகள் வசதி மேம்பாடு, மற்றும் சிறப்பாக பராமரிக்கப்பட்ட சிறு பொருட்கிடங்கு ஆகியவற்றிற்கான சுழற்கேடயங்களை சேலம் கோட்டத்தின் பொறியியல், வணிகவியல் மற்றும் பொருள்வாங்கு துறைகள் பெற்றுள்ளன.

நேற்று (12.04.2017) சென்னையில் நடைபெற்ற தெற்கு ரயில்வே வார விழாவில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் திரு வசிஷ்ட ஜோஹிரி அவர்கள் மேற்கண்ட மூன்று சுழற்கேடயங்களையும் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா அவர்களிடம் சேலம் கோட்ட முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளர் திரு பெருமாள் நந்தலால், சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் திரு விஜுவின் மற்றும் சேலம் கோட்ட பொருள்வாங்கு துறை துணைமேலாளர் திரு ஜி.சுந்தர்ராவ் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.

மேற்கண்ட கேடயங்களை பெற்று சேலம் திரும்பிய சேலம் கோட்ட முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளர் திரு பெருமாள் நந்தலால், சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் திரு விஜுவின் அவர்களுக்கு சேலம் கோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர் சார்பில் சேலம் ரயில்நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சேலம் கோட்டம் அனைத்து துறைகளிலும் இது போன்றே சிறப்பாக செயல்பட்டு வருவதாக சொன்ன சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா சேலம் கோட்டம் இது போன்ற பல்வேறு பரிசுகளை மேலும் வருங்காலத்தில் பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.  

No comments:

Post a Comment