Tuesday, 14 November 2017

ஏற்காட்டில் சேலம் கோட்டம் ஊழியர்களுக்கான விடுமுறை இல்லம் மற்றும் அதிகாரிகள் ஓய்வு அறைகள் இன்று (14.11.2017) திறப்பு








ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் நலனுக்காக தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஏற்காட்டில் ஊழியர்களுக்கான விடுமுறை இல்லம் மற்றும் அதிகாரிகள் ஓய்வு அறைகள் இன்று (14.11.2017) திறந்து வைக்கப்பட்டன. இவற்றை சேலம் துணைக் கோட்டப் பொறியாளர் திரு. ஏ, ராமச்சந்திரன் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா, சேலம் ரயில்வே மகளிர் அமைப்பின் தலைவி திருமதி அனிதா வர்மா, கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் திரு சந்திரபால், ரயில்வே மகளிர் அமைப்பின் துணைத்தலைவி திருமதி குசும்லதா, தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எம். நரசிம்மம்,  முதுநிலை கோட்ட ஒருங்கிணைப்பு பொறியாளர் திரு பெருமாள் நந்தலால்,முதுநிலை நிதி மேலாளர் டாக்டர் எஸ் உமா மகேஸ்வரி, முதுநிலை மின்பொறியாளர் திரு எம். பிரபாகரன், முதுநிலை சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு பொறியாளர் எல்என் சிவநாத்பாபு, முதுநிலை வணிக மேலாளர் திரு ஏ விஜுவின், கோட்டப் பொறியாளர்  எம்.மாரியப்பன், துணைப் பொருள்வாங்கு துறை மேலாளர் திரு பிடிஜி சுந்தர்ராவ், இதர அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.  சுமார் 30 லட்சம் ரூபாய் செலவில் இந்த ஓய்வு அறைகள் ஏற்கனவே ஏற்காட்டில் இருந்த ரயில்வே மைக்ரோவேவ் டவர் கட்டிட வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளன.

திரு வர்மா அவர்கள் பேசுகையில் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள ஊழியர்கள் விடுமுறை இல்லம் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் நிறுவப்பட ஊழியர்களால் கோரிக்கை வைக்கப்பட்டு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும், இங்குள்ள ஓய்வு அறைகளில் பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரிகள் மிகக் குறைந்த செலவில் வசதியாக தங்க கட்டில், படுக்கை, இருக்கைகள், சமைக்கும் வசதிகளுடன், எப்போதும் அவர்களுக்கு உதவ மேற்பார்வையாளர் குழு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.  ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து தங்கி மகிழ இந்த வசதிகள் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  

No comments:

Post a Comment