அக்டோபர்
30 முதல் நவம்பர் 4ம் தேதி வரை ஒவ்வொர் ஆண்டும் இந்தியா முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில்
கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்திய ரயில்வேயில் அனைத்து இடங்களிலும், பல்வேறு
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இத்தருணத்தில் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, இன்று
(02.11.2017) தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அலுவலகத்தில், ஊழியர் உணர்வாக்க கருத்தரங்கம்
நடத்தப்பட்டது.
சேலம்
ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா அவர்கள் இக்கருத்தரங்கிற்கு தலைமை வகித்து
உரையாற்றினார். அவர் உரையாற்றுகையில், விதிகள் நம் நடத்தையை நேர்படுத்தவே உருவாக்கப்பட்டுள்ளன
என்றும், நேர்மையாக நடப்பவர்கள் எந்த ஒரு நடவடிக்கைக்கும் அச்சப்பட தேவையில்லை என்றும்
சொன்னார். ஒரு விதி நடைமுறைக்கு முரண்பாடாக
இருப்பதாக உணர்ந்தால், அதை மாற்றச் சொல்வதில் தவறில்லை என்றும், கண்காணிப்பு அதிகாரிகள்
ஊழியர்கள் தவறு செய்வதை தடுக்க அவர்களுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும் என்றும்,
மறுமுறையும் அவர்கள் தவறு செய்வது தெரிந்தால் பின்னர் நடவடிக்கை எடுக்க சிபாரிசு செய்யலாம்
என்றும் சொன்னார்.
பின்னர்
சேலம் கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் திரு சந்திரபால், தெற்கு ரயில்வே துணை;த் தலைமை
கண்காணிப்பு அலுவலர்கள், திரு தேவேந்திரகுமார் யாதவ், திரு கே. கோபால் ஆகியோர் உரையாற்றினர்.
2AC coach capacity wrongly mentioned, pls correct it
ReplyDelete