இளம்
மாணவர்களின் உள்ளத்தில் கணிதம் பற்றிய ஆர்வத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே பள்ளிகளுக்கிடையிலான
கணித ஒலிம்பியாட் ஒன்றை துவக்கி நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு, இரண்டாவது கணித ஒலிம்பியாட்,
ஈரோட்டில் (ஈரோடு ரயில் நிலையம் பின்புறம்) உள்ள ரயில்வே மேல்நிலைப்பள்ளியில் நாளை
(30.11.2017) காலை 9.00 மணிக்கு, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா
அவர்களால் துவக்கி வைக்கப்பட உள்ளது. இந் நிகழ்ச்சியில் தெற்கு ரயில்வே முதன்மைத் தலைமைப்
பணியாளர் நல அலுவலர் திருமதி சுனிதா வேதாந்தம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,
மதியம் 02.30 மணிக்கு நடைபெறும் பரிசளிப்பு விழாவின் போது போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்க
உள்ளார். விழாவில் சேலம் தெற்கு ரயில்வே மகளிர் நல அமைப்பின் தலைவி திருமதி அனிதா வர்மா
அவர்களுடன், சேலம் கோட்ட ஊழியர்கள், அதிகாரிகள், பள்ளியின் மாணவர்கள், அவர்களது பெற்றோர்களும்
கலந்து கொள்கிறார்கள். கணிதத்தில் கின்னஸ் சாதனை புரிந்த தெற்கு ரயில்வே ஓய்வு பெற்ற
நிலைய மேலாளர் திரு. டி. ஆர். ஜோதிலிங்கம் அவர்களும் கலந்து கொண்டு போட்டியாளர்களை
உற்சாகப்படுத்த உள்ளார்.
No comments:
Post a Comment