Friday, 15 July 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் 2016ம் ஆண்டுக்கான ஓய்வூதியர் குறை தீர்ப்பு மன்றம்

சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் திரு. ரவி சேகர் சின்ஹா   உரையாற்றுகிறார்

குறை தீர்ப்பு மன்றத்தில் கலந்து கொண்டோர்

சேலம்  கோட்ட பணியாளர் நல அலுவலர் திரு ஜி ஜனார்த்தனன் உரையாற்றுகிறார்



2016ம் ஆண்டிற்கான இடைக்கால ஓய்வூதியர் குறை தீர்ப்பு மன்றம் இன்று (15.07.2016) தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அலுவலகம் அருகில் உள்ள ரயில்வே அலுவலர் மன்ற வளாகத்தில் நடைபெற்றது. இம் மன்றத்தில் சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் திரு. ரவி சேகர் சின்ஹா தலைமை ஏற்றார்.  60 ரயில்வே ஓய்வூதியர்கள் மற்றும் பயனாளிகள் இந்த  மன்றத்தில் கலந்து கொண்டு தங்களது மனுக்களை சமர்ப்பித்தனர்.  மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நிறுவனங்களின் நிலைக்குழுவின் உறுப்பினர்கள் ஓய்வூதியர்களுக்கு உதவ அழைக்கப்பட்டிருந்தனர். சேலம்  கோட்ட பணியாளர் நல அலுவலர் திரு ஜி ஜனார்த்தனன், சேலம் கோட்ட உதவி நிதி மேலாளர் திரு. ஆனந்த் பாண்டியா, மற்றும் இதர கோட்ட  அதிகாரிகள் இந்த  மன்றத்தில் கலந்து கொண்டனர்.

முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட 34 மனுக்களில், 21 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, ரூ.5.10.397/- நிவாரணமாக வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.  12 மனுக்கள் நடைமுறையில் உள்ள விதிகளுக்கு புறம்பாக இருந்ததால் தள்ளுபடி செய்யப்பட்டன.  போதிய ஆவணங்கள் இல்லாததால், 1 மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள இயலவில்லை. மேலும் குறை தீர்ப்பு மன்றத்தின் போது இன்று புதியதாக சமர்ப்பிக்கப்பட்ட 21 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் ஆணை பிறப்பிக்கப்படும். 


குறை தீர்ப்பு மன்றத்தில் பங்கேற்ற ஓய்வூதியர்கள் மற்றும் பயனாளிகள் சேலம் கோட்ட நிர்வாகம் தங்களது குறைகளை கேட்டு அவற்றை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுத்து வருவது குறித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். 

No comments:

Post a Comment