மாண்புமிகு மத்திய ரயில்வே அமைச்சர் திரு சுரேஷ் பிரபு அவர்கள் இந்தியரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) மூலமாக இந்திய ரயில்வே பயணிகளுக்கு அனுப்பியிருந்த கடிதத்தின் தமிழாக்கம்:
அன்பு நண்பர்களே,
நமது பாரத தேசத்தின் வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு இந்திய ரயில்வே முதுகெலும்பாக விளங்கும் என்பது நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திடமான நம்பிக்கையாகும். உங்களைப் பங்குதாரராகக் கொண்டு இந்திய ரயில்வேயில் உள்ள நாங்கள் அனைவரும் இந்த குறிக்கோளையை மனதில் வைத்து பணியாற்றி வருகிறோம்.
18 மாதங்களுக்கு முன்னர், நான் மிகப்பெரும் நிறுவனமாக விளங்கும் இந்திய ரயில்வேயில் அமைச்சராக பொறுப்பேற்றபோது, என் முன்னர் பல்வேறு சவால்கள் காத்திருந்தன. படிப்படியாக சிறுசிறு மாற்றங்கள் செய்யவோ அல்லது வழக்கமான நடைமுறைகளிலிருந்து விடுபட்டு வித்தியாசமாக செயல்படவோ தேர்ந்தெடுக்க என்முன்னர் வாய்ப்பும் இருந்த்து. நான் வித்தியாசமாக செயல்பட முடிவெடுத்தேன்.
ரயில்வேயின் செயல்பாடுகளில் மாற்றம் கொண்டுவருவது கட்டாயமாக இருந்தது. இந்திய ரயில்வே மிக மெதுவாக செயல்படும் ஒரு பெரும் இயந்திரமாகவே கருதப்பட்டு வந்த ஒரு எண்ணத்திலிருந்து உடனடியாக செயல்படும் ஒரு நவீன இயக்கமாக்க அதனை மாற்ற வேண்டிய ஒரு கட்டாயமும் இருந்தது. இந்த ஒரு குறிக்கோளில் நாங்கள் சற்றே முன்னேற்றம் கண்டுள்ளோம் என்பது மகிழ்ச்சிக்குறிய பொருளாக இருந்தாலும், மேலும் நிறைய முன்னேற்றம் காண வேண்டியுள்ளது என்பதும் உண்மையே.
நாட்டின் அடித்தட்டு குடிமகனின் நிலையை உயர்த்த வேண்டுமென்பது இந்த அரசின் முக்கியமான குறிக்கோள் என்று நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் பல முறை குறிப்பிட்டிருப்பதை மனதில் கொண்டு நமது மக்களின் பயண அனுபவத்தை மேம்படுத்த நாங்கள் உழைத்து வருகிறோம். இதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்.
இந்திய ரயில்வேயின் கடந்த இரண்டாண்டு சாதனைகளை விளக்க கீழ்க்கண்ட மின்நூலை வெளியிட்டுள்ளோம்.
அவற்றுள் சில முக்கியமான சாதனைகளை கீழே தந்திருக்கிறேன்.
2009-14ம் ஆண்டுகளிக்கிடையே புதியதாக நிறுவப்பட்ட அகல ரயில்பாதைகளை விட 85 சதவீதம் அதிகமாக 2828 கிமீ அகலரயில்பாதைகளை நிறுவியுள்ளோம். இது 2009-14ன் ஒரு நாள் சராசரியான 4,3 கிமீ உடன் ஒப்பிடுகையில் 7.7 கிமீ ஆகும்.
2005-16ம் ஆண்டில் ரூ 94.000 கோடி மூலதன முதலீடாக செலவு செய்யப்பட்டுள்ளது. இது 2009 முதல் 2014 வரை ஐந்தாண்டுகளில் செலவிடப்பட்ட தொகையைப் போல இருமடங்காகும்.
கடந்த ஆண்டில் 1730 கிமீ தொலைவு ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. இது 2009-14 இடையே ஒவ்வோர் ஆண்டும் செய்யப்பட்ட சராசரி மின்மயமாக்கலான 1184 கிமீ விட அதிகமாகும்.
சமூக ஊடகங்கள் மூலமாக ஒரு நாளின் 24 மணி நேரமும் பயணிகளின் குறைகள் கேட்கப்பட்டு நிவர்த்திக்கப்பட்டு வருகின்றன.
தூய்மை : தூய ரயில் தூய பாரதம் இயக்கம், எனது ரயில்பெட்டியை சுத்தம் செய் சேவை (Clean My Coach Service) , ரயில்நிலையங்கள் பற்றி வெளியார் மூலமாக செய்யப்பட்ட தூய்மை தணிகை
இணையதளம் மூலமாக உணவு, வீல்சேர், படுக்கை விரிப்பு போன்றவற்றை பெறும் சேவைகள் அறிமுகம்
இந்தியரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC)-யின் முன்பதிவு எண்ணிக்கை அதிகரிப்பு, தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள், மொபைல் போன் மூலமாகவே முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை ரத்து செய்யும் வசதி, உறுதி செய்யப்படாத பயணச்சீட்டு பயணிகளின் பயணத்தை மாற்று ரயில்களின் மூலமாக உறுதி செய்விக்கும் விகல்ப் திட்டம்.
ரயில்களின் வேகம் அதிகரிப்பு : இந்தியாவின் முதல் அதிவிரைவு ரயில் சேவையான கதிமான் ரயில் அறிமுகம், டால்கோ நிறுவனத்தின் அதிநவீன ரயில்களின் சோதனை ஓட்டம்
அகர்தலா, மிசோரம் மற்றும் மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களை அகலரயில்பாதை மூலம் இணைப்பு
400 ரயில் நிலையங்களில் அதிவேக இணையதள சேவை வழங்கும் திட்டத்தின் கீழ் பல்வேறு ரயில்நிலையங்களில் இலவச இணையதள சேவை
சுற்றுச்சூழல் மேம்பாடு : வருங்காலங்களில் மேற்கொள்ளப்பட உள்ள அனைத்து திட்ட வரைவுகளில் மொத்த திட்டச் செலவில் 1 சதவீத்த்தை சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சூரிய சக்தி மற்றும் காற்று சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் திட்டங்கள், வழக்கமான மின்விளக்குகள் அனைத்தையும் சுற்றுச்சூழலை பாதிக்காத எல்ஈடி விளக்குகளாக மாற்றும் திட்டம்
வெளிப்படையான கொள்முதல் செய்யும் நடைமுறையை உறுதி செய்ய இணையதளம் மூலமான ஒப்பந்தப்புள்ளிகள் கோருதல் (E-Tendering)
இந்திய ரயில்வேயை மேம்படுத்தி இந்தியாவை மேம்படுத்தும் மேலான முயற்சியிலான எனது இந்த பயணத்தில், உங்கள் அனைவரது ஒத்துழைப்பு மற்றும் பங்கேற்பினை வேண்டுகிறேன், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்திய ரயில்வேயை மேம்படுத்துவோம்.
அன்புடன்,
சுரேஷ் பிரபு
No comments:
Post a Comment