Thursday, 28 July 2016

சேலம் ரயில் நிலையம் இந்திய ரயில்வே கோட்டத் தலைமையகங்களில் உள்ள சுத்தமாக பராமரிக்கப்படும் ரயில்நிலையங்களில் முதலிடம் மற்றும் இந்திய ரயில்வேயில் முதல் 10 இடங்களில் ஒன்றாக கருத்துக்கணிப்பில் தேர்வு, ஈரோடு ரயில் நிலையத்திற்கு 5ம் இடம்





தூய ரயில், தூய இந்தியா திட்டத்தின் கீழ், இந்திய ரயில்வேயில் உள்ள அனைத்து 1 மற்றும் பிரிவு ரயில் நிலையங்களில் தூய்மையாக பராமரிக்கப்படும் ரயில்நிலையங்கள் பற்றி இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகத்தின் மூலம் பல்வேறு கேள்விகள் கொண்ட ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப் பெற்றது. ஆண்டுக்கு 60 கோடி ரூபாய்க்க மேல் வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்கள் 1 பிரிவிலும், ஆண்டுக்கு 5 கோடி முதல் 60 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டும் ரயில்நிலையங்கள் பிரிவிலும் இருக்கும்இந்திய ரயில்வேயின் இத்தகு 1 மற்றும் பிரிவு ரயில்நிலையங்களில் பயணிகளிடம் அவற்றின் தூய்மை அடிப்படையில் சிறப்பாக மற்றும் சராசரிக்கும் கீழாக பராமரிக்கப்படும் ரயில்நிலையங்களை 1 முதல் 5 வரை வரிசைப்படுத்துமாறு  கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (IRCTC) தற்போது தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளதுஅந்த அறிக்கையின் படி,
1.              ரயில்வே கோட்ட தலைமையகங்களில் உள்ள ரயில் நிலையங்களில், சேலம் ரயில் நிலையம் முதலிடம் பெற்றுள்ளது.
2.         இந்தியா முழுவதும் உள்ள ரயில நிலையங்களின் பட்டியலில் தூய்மையாக பராமரிக்கப்படும் முதல் 10 ரயில்நிலையங்களில் சேலம் ரயில் நிலையம் 9வது இடம் பெற்றுள்ளது.
3.    இந்தியா முழுவதும் உள்ள 68 ரயில்வே கோட்டங்களில், தூய்மையை பராமரிக்கும் ரயில்வே கோட்டங்களின் வரிசையில் சேலம் கோட்டம் 4 வது இடம் பெற்றுள்ளது.
4.        ஒரு நாளைக்கு 10,000 முதல் 25.000 பயணிகள் வரை வந்து செல்லும் ரயில் நிலையங்களின் தூய்மைப் பட்டியலில் சேலம் ரயில் நிலையம் 3ம் இடமும், ஈரோடு ரயில் நிலையம் 5ம் இடமும் பெற்றுள்ளன


சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரி சங்கர் வர்மா அவர்கள் சிறப்பாக இத்தகு சாதனை படைத்ததற்கு சேலம் கோட்ட தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எம்.நரசிம்மம்  மற்றும் இதர அதிகாரிகள் ஊழியர்களையும் பாராட்டினார்.  

No comments:

Post a Comment