Thursday, 15 December 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் 2016ம் ஆண்டுக்கான ஓய்வூதியர் குறை தீர்ப்பு மன்றம்

 
சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. ஹரி சங்கர் வர்மா உரையாற்றுகிறார்

 ஓய்வூதியர் குறை தீர்ப்பு மன்றத்தில் கலந்து கொண்டவர்கள்
சேலம் கோட்ட முதுநிலை நிதி மேலாளர் திரு. பி. கம்பன்உரையாற்றுகிறார்

2016ம் ஆண்டிற்கான ஓய்வூதியர் குறை தீர்ப்பு மன்றம் இன்று (15.12.2016) தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கில் நடைபெற்றது. இம் மன்றத்தில் சேலம் ரயில்வே கோட்ட  மேலாளர் திரு. ஹரி சங்கர் வர்மா தலைமை ஏற்றார்.  100 ரயில்வே ஓய்வூதியர்கள் மற்றும் பயனாளிகள் இந்த  மன்றத்தில் கலந்து கொண்டு தங்களது மனுக்களை சமர்ப்பித்தனர்.  மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நிறுவனங்களின் நிலைக்குழுவின் உறுப்பினர்கள் ஓய்வூதியர்களுக்கு உதவ அழைக்கப்பட்டிருந்தனர். சேலம் கோட்ட முதுநிலை நிதி மேலாளர் திரு. பி. கம்பன், சேலம்  கோட்ட பணியாளர் நல அலுவலர் திரு எஸ். திருமுருகன், மற்றும் இதர கோட்ட  அதிகாரிகள் இந்த  மன்றத்தில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசுகையில், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. ஹரி சங்கர் வர்மா, இந்திய ரயில்வே மற்றும் இந்திய ராணுவம் இரண்டும் தங்களது ஓய்வூதியர்களின் நலனில் பெரும் அக்கறை காட்டி வருவதாகவும், நாடெங்கிலும் உள்ள இந்திய ரயில்வேயின் ஓய்வூதியர்களின் குறைகள் 99 சதவீதம் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

மொத்தம் 138 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டதில், 118 மனுக்கள் அனுமதிக்கப்பட்டு, 26,35,279 ரூபாய்கள் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.  சேலம் கோட்டம் துவக்கப்பட்ட நாளிலிருந்து நடத்தப்பட்டு வரும் இத்தகு ஓய்வூதியர் குறை தீர்ப்பு மன்றங்களில் பைசல் செய்யப்பட்ட தொகைகளிலேயே அதிகமான தொகை இதுவாகும். 16 மனுக்கள் நடைமுறையில் உள்ள விதிகளுக்கு புறம்பாக இருந்ததால் தள்ளுபடி செய்யப்பட்டன.  போதிய ஆவணங்கள் இல்லாததால், 4 மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள இயலவில்லை.

குறை தீர்ப்பு மன்றத்தில் பங்கேற்ற ஓய்வூதியர்கள் மற்றும் பயனாளிகள் சேலம் கோட்ட நிர்வாகம் தங்களது குறைகளை கேட்டு அவற்றை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுத்து வருவது குறித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். 

No comments:

Post a Comment