Friday, 23 December 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் வணிகவியல் பிரிவு ஊழியர்களுக்கான வாடிக்கையாளர் சேவை பற்றிய கருத்தரங்கு

திரு மஹேஷ் அவர்கள் உரையாற்றுகிறார்



இந்திய ரயில்வேயில் பயணிகள் மற்றும் சரக்கு வாடிக்கையாளர்கள் முக்கிய பங்காற்றுவதால், ரயில்வே ஊழியர்கள் தங்களது வாடிக்கையாளர்களை மரியாதையாக நடத்துவதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தின் வணிகவியல் பிரிவு அதிகாரிகளால், இன்று (23.12.2016) சேலம் கோட்ட அலுவலகத்தில், வாடிக்கையாளர் சேவை பற்றிய கருத்தரங்கு நடத்தப்பட்டது. இந்த கருத்தரங்கில் சேலம் கோட்ட வணிகவியல் ஒருங்கிணைப்பு மேலாளர் திரு.விஜுவின் அவர்கள் தலைமை தாங்க,  ஈரோட்டைச் சேர்ந்த ப்ரோசாம்ப்ஸ் மனிதவளநிறுவனத்தை சேர்ந்த திரு மஹேஷ் வி கிரி அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.  திரு திரு மஹேஷ் அவர்கள் பேசுகையில் வாடிக்கையாளர்களை மரியாதையாக நடத்தினால், அவர்களும் நமக்கு மரியாதை தருவார்கள் என்றும், ரயில்வே ஊழியர்களைப் போலவே அவர்களைக் கருதி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதன் மூலம், ரயில்வேயும் மேலும் முன்னேற்றம் காண முடியும் என்றும் தெரிவித்தார்.  பயணிகள் சேவையில் நேரடியாக ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்கள் தாங்கள் மட்டுமன்றி தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களையும் வாடிக்கையாளர்களை மரியாதையாக நடத்த கற்றுத்தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். பின்னர் அவர் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.  சேலம் கோட்டத்தின் வணிகவியல் பிரிவை சேர்ந்த 62 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர். 

சேலம் கோட்ட உதவி மேலாளர் திரு எம். ஷாஜஹான் நன்றியுரை வழங்கினார்.  முன்னதாக சேலம் கோட்ட வணிக மேலாளர் திரு. கே. மது வந்தோரை வரவேற்றார். 


No comments:

Post a Comment