மாண்புமிகு
பாரதப் பிரதமர் அவர்களின் மின்னணு இந்தியா (டிஜிட்டல் இந்தியா) திட்டத்தின் கீழ், ரயில்
பயணிகள் ரொக்கமின்றி டெபிட் மற்றும் கிரடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பயணச் சீட்டு
பெற உதவும் பொருட்டு, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரி சங்கர் வர்மா அவர்களது
உத்தரவின் பேரில், சேலம் கோட்ட வணிகவியல் பிரிவு அதிகாரிகள், இந்திய ஸ்டேட் வங்கியின்
ஒத்துழைப்புடன், கோயம்புத்தூர் (2), சேலம் (1), மற்றும் ஈரோடு (1) ரயில்நிலையங்களில்
உள்ள ரயில்பயணச்சீட்டு முன்பதிவு மையங்களில் கிரடிட் கார்டு மூலம் செயல்படும் 4 பணப்பரிவர்த்தனை
இயந்திரங்களை சோதனை அடிப்படையில் நிறுவியுள்ளது. ஏற்கனவே இந்த ரயில்நிலையங்களில் தலா
1 டெபிட் கார்டு மூலம் செயல்படும் இயந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன. ரயில் பயணிகள் தங்களது ரயில் பயணச்சீட்டுகளைப் பெற
இந்த இயந்திரங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. சேலம் கோட்டத்தில் மேலும் 15 ரயில் நிலையங்களில்
உள்ள பயணச்சீட்டு முன்பதிவு மையங்களில் விரைவில் இது போன்ற இயந்திரங்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment