சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா அவர்களது உத்தரவின்
பேரில் சேலம் கோட்டத்தின் பல்வேறு ரயில்நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடீர்
பயணச்சீட்டு பரிசோதனைகளின் தொடர்ச்சியாக, நேற்று மதியம் முதல் இரவு வரை ஈரோடு மற்றும்
கரூர் ரயில்நிலையங்கள் மற்றும் மும்பை நாகர்கோவில் விரைவு ரயில், மங்களூர் சென்னை எழும்பூர்
விரைவு ரயில், சேலம் கரூர் பயணிகள் ரயில் போன்ற ரயில்களில், சேலம் கோட்ட உதவி வணிக
மேலாளர் திரு. எம். ஷாஜஹான் அவர்கள் தலைமையில் 7 பயணச்சீட்டு பரிசோதகர்கள் மற்றும்
1 ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் கொண்ட குழு திடீர் பயணச்சீட்டு பரிசோதனை மேற்கொண்டது.
இதில் 94 பேர் பயணச்சீட்டு இல்லாமலும் இருவர் கட்டணம் செலுத்தாமல் சரக்குகளை எடுத்துச்
சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் 35,700 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
1989;ம் ஆண்டு இந்திய ரயில்வே சட்டம் 138வது
பிரிவின் படி தகுந்த பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல்
சரக்குகளை தங்களுடன் எடுத்துச் செல்வதும், தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டு அவர்களிடம்
இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதுடன் ஓராண்டு வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்பட
வாய்ப்பு உள்ளதால், பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வதை தவிர்க்குமாறு பயணிகள் கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment