ஈரோட்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பயணச் சீட்டு பரிசோதனை
சேலம் கோட்ட வணிக மேலாளர் பயணச்சீட்டுகளை பரிசோதிக்கிறார்
தெற்கு
ரயில்வே சேலம் கோட்டத்தின் வணிகவியல் பிரிவு அதிகாரிகளால் ஈரோடு ரயில் நிலையத்தில்
இன்று (19.12.2016)
15 திடீர்
பயணச்சீட்டு பரிசோதனை 13 விரைவு ரயில்களிலும் 2 பயணிகள் ரயில்களிலும் சேலம் ரயில்வே
கோட்ட மேலாளர் திரு. ஹரி சங்கர் வர்மா அவர்களது ஆணையின் பேரில் மேற்கொள்ளப்பட்டது.
140 பேர் பயணச்சீட்டு இல்லாமலும், சரக்குகளை புக்கிங் செய்யாமல் எடுத்துச் செல்வதும்,
கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் 52,870 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த சோதனை
சேலம் கோட்ட வணிக மேலாளர் திரு கே.மது அவர்கள் தலைமையில் 13 பயணச்சீட்டு பரிசோதகர்கள்
மற்றும் 2 ரயில்வே பாதுகாப்புப்படை வீர்ர்களால் நடத்தப்பட்டது. சேலம் கோட்டத்தின் பிற
இடங்களிலும் இது போன்ற திடீர் பயணச்சீட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
No comments:
Post a Comment