Monday, 19 September 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் இன்று (2016 செப்டம்பர் 19) தூய ரயில்வண்டிகள் தினம் அனுசரிப்பு


ரயில்பெட்டிகள் சுத்தப்படுத்தப்படுகின்றன
 சமையலறைப் பெட்டியில் சோதனை
 பேக்கிங் செய்யப்பட்ட உணவின் தேதி சோதனை செய்யப்படுகிறது

 ரயில் தூய்மை குறித்து பயணிகளிடம் கருத்து கேட்கப்படுகிறது
 ஜனனி சேவா கடையில் பரிசோதனை
 உணவகத்தில் உள்ள குடிநீர் குழாயில் நீரின் தரம் சோதனை 

தூய்மை வாரத்தின் ஒரு பகுதியாக இன்று (19.09.2016-திங்கட்கிழமை), தூய ரயில்வண்டிகள் தினம்  சேலம் கோட்டம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது, இன்று அனைத்து ரயில்களிலும் உள்ள உணவு ரயில்பெட்டிகள் (Pantry Cars) உள்ளிட்ட ரயில்பெட்டிகள் மற்றும் இதர உணவருந்தும் இடங்கள் உள்பட்ட அனைத்து இடங்களிலும் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. சேலம் கோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சேலம் கோட்ட கூடுதல் மேலாளர் திரு. சந்திரபால் அவர்களுடன் இணைந்து இப்பணிகளில் ஈடுபட்டனர். 

12 ரயில்களில் சேலம் கோட்ட ஒருங்கிணைப்பு வணிக மேலாளர் திரு விஜுவின் அவர்களுடன், சேலம் கோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கொண்ட குழு 11 ரயில்களில் சுத்தம், பேக்கிங் செய்யப்பட்ட உணவுப்பொருள்களின் (முக்கியமாக பால் பாக்கெட்டுகளின்) காலாவதியாகும் நாள், அவற்றின் விலை, எடை, போன்றவைகளை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.  சைவ உணவகம் மற்றும் இதர உணவகங்களிலும், இது போன்ற சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.  ஒரு பழம் விற்கும் கடையில் சில பழங்கள் புதியதாக இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டு அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த எச்சரிக்கை வழங்கப்பட்டது.  குழந்தைகள் உணவுப் பொருட்கள் விற்கும் ஜனனி சேவா கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்ட போது அங்கு குழந்தைகளுக்கான பால் புட்டிகள் இல்லாதது கண்டறியப்பட்டு உடனடியாக அவைகளை வாங்கி விற்பனைக்கு வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. 


No comments:

Post a Comment