Sunday, 18 September 2016

தூய்மை வாரத்தின் இரண்டாவது நாள் தூய ரயில்நிலைய நாளாக தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் இன்று (18.09.2016) அனுசரிப்பு


 ஈரோடு ரயில்நிலையம்

 கரூர் ரயில் நிலையம்

 குன்னூர் ரயில் நிலையம்


 சேலம் ரயில் நிலையம்


திருப்பூர்ரயில் நிலையம்

2016 செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 25ம் தேதி வரை இந்திய ரயில்வே முழுவதும் அனுசரிக்கப்படும் தூய்மை இந்தியா வாரத்தின் இரண்டாம் நாளான இன்று  18.09.2016 (ஞாயிற்றுக்கிழமை)- தூய ரயில்நிலைய தினமாக சேலம் ரயில்வே கோட்டத்தின் அனைத்து ரயில்நிலையங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. அனைத்து ரயில்நிலையங்களும் சுத்தம் செய்யும் இயந்திரங்களை பயன்படுத்தி முழுமையாக சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன, மக்கும் மற்றும் மக்காத குப்பைகளுக்க தனித்தனி குப்பைக்கூடைகள் வைக்கப்பட்டன,. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சாரண சாரணியர், போன்றோரின் ஒத்துழைப்புடன், குப்பைக் கூடைகளை நிரப்புவோம் மற்றும் குப்பைக்கூடைகளை தானமாக வழங்குவோம் என்பது போன்ற விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.  


நிகழ்ச்சிகளில் பங்கேற்றோர், ரயில் பயணிகளிடம் ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள குப்பைக்கூடைகளில் மட்டும் குப்பைகளைப் போடுமாறும், இதர இடங்களில் குப்பை போட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர், பல்வேறு ரயில்நிலையங்களில் மரம் நடும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. சேலம் கோட்டத்தின் சேலம், ஈரோடு, திருப்பூர், கரூர், கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னூர், திருப்பத்தூர், மொரப்பூர் மற்றும் இதர ரயில்நிலையங்களில், சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலளார் திரு. சந்திரபால் அவர்கள் தலைமையில், துப்புறவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

No comments:

Post a Comment