Tuesday, 20 September 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் இன்று (2016 செப்டம்பர் 20) தூய தண்ணீர் தினம் அனுசரிப்பு

 ஈரோட்டில் தண்ணீரின் தரம் பரிசோதிக்கப்படுகிறது
 திருப்பூரில் குடிநீர் குழாய் சுத்தம் செய்யப்படுகிறது
திருப்பூரில் குளிர்நீர் பெட்டி சுத்தம் செய்யப்படுகிறது
 கரூரில் தண்ணீரின் தரம் பரிசோதிக்கப்படுகிறது
 நாமக்கல்லில் நீர்த்தொட்டி சுத்தம் செய்யப்படுகிறது
சேலத்தில் குடிநீர் பாட்டில் சோதனை

தூய்மை வாரத்தின் ஒரு பகுதியாக இன்று (20.09.2016-செவ்வாய்கிழமை), தூய தண்ணீர் தினமாக சேலம் கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில்நிலையங்களிலும் மற்றும் இதர ரயில்வே இடங்களிலும் அனுசரிக்கப்பட்டது, இன்று சேலம் கோட்டத்தில் உள்ள சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், போத்தனூர், மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னூர், கரூர் உள்ளிட்ட அனைத்து ரயில்வே இடங்களிலும் உள்ள நீர் நிலையகளான நீர்த்தொட்டிகள், குழாய்கள், மற்றும் குளிர்நீர் பெட்டிகள் ஆகியவை சுத்தப்படுத்தப்பட்டன. மேலும் நீரின் தரம் பற்றிய பரிசோதனைகளும் அனைத்து இடங்களிலும் சேலம் கோட்ட தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எம். நரசிம்மம் தலைமையில் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது. இது தவிர, அனைத்து ரயில்நிலையங்களிலும் உள்ள உணவகங்களில் விற்கப்படும் குடிநீர் பாட்டில்களின் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிகள் சோதனை செய்யப்பட்டன. 

No comments:

Post a Comment