Friday, 16 September 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் 2016 செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 25ம் தேதி வரை தூய்மை இந்தியா வாரம் அனுசரிப்பு





ரயில்நிலையங்கள் மற்றும் இதர ரயில்வே இடங்களை சுத்தமாக பராமரிப்பது என்பது இன்றைய சூழலில் இந்திய ரயில்வே எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய சவாலாகும்மாண்புமிகு மத்திய ரயில்வே அமைச்சர் திரு சுரேஷ் பிரபு அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், இந்திய ரயில்வே ரயில்பயணிகள் மற்றும் இதர ரயில் உபயோகிப்பாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, 2016 செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 25ம் தேதி வரை தூய்மை இந்தியா வாரமாக இந்திய ரயில்வே முழுவதும் அனுசரிக்கப்பட உள்ளது. இந்த காலகட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் கீழே குறிப்பிட்டுள்ளவாறு மேற்கொள்ளப்பட உள்ளன.

17.09.2016 (சனிக்கிழமை)- தூய சுற்றுச்சூழல் தினம் –  முதல் நாளன்று ரயில்நிலையங்கள் மற்றும் ரயில்கள் உள்ளிட்ட அனைத்து ரயில்வே வளாகங்களிலும் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ரயில்வே வளாகங்களில் உள்ள மரக்கிளைகள் சீராய் வெட்டப்பட்டு, மரம் நடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்,

18.09.2016 (ஞாயிற்றுக்கிழமை)- தூய ரயில்நிலைய தினம் –  இரண்டாம் நாளன்று ரயில்நிலையங்களை முழுமையாக சுத்தப்படுத்தும் பணிகள் சுத்தம் செய்யும் இயந்திரங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளுக்க தனித்தனி குப்பைக்கூடைகள் வைக்கப்படும்,. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சாரண சாரணியர், போன்றோரின் ஒத்துழைப்புடன், குப்பைக் கூடைகளை நிரப்புவோம் மற்றும் குப்பைக்கூடைகளை தானமாக வழங்குவோம் என்பது போன்ற விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும்.  

19.09.2016 (திங்கட்கிழமை)- தூய ரயில்வண்டிகள் தினம் –  மூன்றாம் நாளன்று அனைத்து ரயில்களிலும் உள்ள உணவு ரயில்பெட்டிகள் மற்றும் இதர உணவருந்தும் இடங்கள் உள்பட்ட அனைத்து இடங்களையும் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.

20.09.2016 (செவ்வாய்க்கிழமை)- தூய தண்ணீர் தினம் –  நான்காம் நாளன்று அனைத்து ரயில்வே இடங்கள் மற்றும் ரயில்களிலும் உள்ள குடிநீர் குழாய்கள், தண்ணீர் தொட்டிகள், போன்றவை சோதனை செய்யப்பட்டு நீரின் தரம் குறித்து சோதனை மேற்கொள்ளப்படும்.

21.09.2016 (புதன்கிழமை)- தூய ரயில்வே வளாக தினம் –  ஐந்தாம் நாளன்று அனைத்து ரயில் நிலைய முன்புறம், மற்றும் வடிநீர் வாய்க்கால்கள் போன்றவற்றை சுத்தம் செய்யும் பணியுடன், அதிகாரமற்ற ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்படும்.

22.09.2016 (வியாழக்கிழமை)- பங்கேற்பு தூய்மை தினம் –  ஆறாம் நாளன்று அரசுசாரா தொண்டு நிறுவனங்கள், பள்ளி மாணவ மாணவியர்களின் பங்கேற்புடன் ரயில்நிலைய வளாகங்கள் மற்றும் இதர பணியிடங்களை சுத்தமாக பராமரிப்பது பற்றி விழிப்புணர்வுப் பணி மேற்கொள்ளப்படும்.

23.09.2016 (வெள்ளிக்கிழமை)-  தூய்மை விளக்க தினம் –  ஏழாம் நாளன்று தெற்கு ரயில்வே சேலம் கோட்ட மேலாளர் தலைமையில் ரயில்வே வளாகங்களில் சுகாதாரம் மற்றும் பராமரிப்பு குறித்த கருத்தரங்கு நடைபெறும். அத் தருணத்தில் அவர் பத்திரிக்கை நண்பர்களை சந்தித்து தூய்மை இந்தியா வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகள் குறித்து விளக்கமளிப்பார்.

24.09.2016 (சனிக்கிழமை)-  தூய்மை அர்ப்பணிப்பு தினம் –  எட்டாம் நாளன்று ரயில்வே காலனிகள் உள்ளிட்ட ரயில்வே வளாகங்களில் பள்ளி மாணவ மாணவியர், சாரண சாரணியர் பங்கேற்கும் தூய்மை பற்றிய விழிப்புணர்வு நடைப்பயணம் மற்றும் குறுநாடகங்கள் நடைபெறும்.

25.09.2016 (ஞாயிற்றுக்கிழமை)-  தூய உணவு தினம் –  கடைசி நாளன்று ரயில்நிலையங்கள் மற்றும் ரயில்களில் உள்ள அனைத்து உணவகங்களிலும், சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அங்குள்ள பணியாளர்களிடையே சமையலறைக் கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி உணவகங்களை தூய்மையாக பராமரிப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்

No comments:

Post a Comment