தூய்மையே வடிவான சேலம் ரயில்நிலையம்
தூய்மை வாரத்தின் எட்டாம் நாளான இன்று
24.09.2016 சனிக்கிழமை தூய்மை அர்ப்பணிப்பு
தினமாக சேலம் கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில்நிலையங்களிலும் அனுசரிக்கப்பட்டது. இன்று சேலம் கோட்டத்தில் உள்ள ரயில்நிலையங்களில்
கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் திரு சந்திரபால் அவர்கள் தலைமையில்சேலம் கோட்ட அதிகாரிகள்
மற்றும் ஊழியர்களால், ரயில்வே காலனிகள் உள்ளிட்ட ரயில்வேவளாகங்களில் பள்ளி மாணவ மாணவியர், சாரண சாரணியர் பங்கேற்கும் தூய்மை பற்றிய விழிப்புணர்வுநடைப்பயணம் மற்றும் குறுநாடகங்கள் நடத்தபட்டன. தெற்கு
ரயில்வே பாரத சாரண சாரணீயர் படையை சேர்ந்த மாணவர்கள் பயணிகளை சந்தித்து தூயமை பற்றிய துண்டு
பிரசுரங்களை வழங்கி, ரயில் நிலைய வளாகங்களை தூய்மையாக பராமரிக்க ரயில்வேக்கு
உதவுமாறு கேட்டுக் கொண்டனர். தெற்கு
ரயில்வே ரயில்தடப் பொறுப்பு பொறியாளர் திரு அப்துல் ரகுமான் அவர்கள்
சேலம் ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு
பிரச்சாரங்களில் கலந்து கொண்டதுடன் சேலம் ரயில்
நிலைய வளாகத்தில் தூய்மை பற்றி ஆய்வு
செய்தார். அப்போது அவர், நீர்க்குழாய்களில் உணவுத்துணுக்குகள் சேர்ந்து நீர்
அடைத்துக்கொண்டிருப்பது கண்டு அவற்றை உடனடியாக சுத்தம்செய்ய உத்தரவிட்டார்.
ரயில்நிலைய நடைமேடைகள் பயணிகள் உட்கார்ந்து
கொண்டு உணவு உண்பதைக் கண்டு அவர்களை காத்திருப்பு அறைகளுக்கு சென்று உணவு
உட்கொள்ளுமாறும், ரயில்நிலைய
நடைமேடைகளை சுத்தமாக பராமரிக்க உதவுமாறும் கேட்டுக்
கொண்டார்.
மேலும் அவர் சாரணர்
படை மாணவர்கள் நடத்திய ரயில்நிலைய வளாக
சுத்தம் பற்றிய குறுநாடகத்தையும் கண்டு களித்த்துடன் மாணவர்களின் பங்களிப்பை
பாராட்டினார்.
No comments:
Post a Comment