கரூர் ரயில்நிலைய வளாகத்தில் தூய்மைப் பணி
திருப்பூர் ரயில்நிலைய வளாகத்தில் தூய்மைப் பணி
போத்தனூர் ரயில்நிலைய வளாகத்தில் தூய்மைப் பணி
தூய்மை வாரத்தின் ஐந்தாவது நாளான இன்று 21.09.2016 (புதன்கிழமை)- தூய
ரயில்வே வளாக தினமாக சேலம்
கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில்நிலையங்களிலும் அனுசரிக்கப்பட்டது, இன்று
சேலம் கோட்டத்தில் உள்ள
சேலம், ஈரோடு, திருப்பூர்,
கோயம்புத்தூர், போத்தனூர், மேட்டுப்பாளையம்,
ஊட்டி, குன்னூர், கரூர், மொரப்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட
அனைத்து ரயில்நிலையங்களிலும் ரயில் நிலைய
வளாகம், மற்றும் வடிநீர்
வாய்க்கால்கள் போன்றவற்றை சுத்தம்
செய்யும் பணி சேலம் ரயில்வே கோட்ட கூடுதல்
மேலாளர் திரு. சந்திரபால் அவர்களது தலைமையில் சேலம் கோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால்
மேற்கொள்ளப்பட்டது. கோயம்புத்தூரில் தெற்கு ரயில்வே தலைமை மின்பகிர்மானப் பொறியாளர் திரு. பி.வி. சந்திரசேகர் அவர்கள் சேலம் கோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.
No comments:
Post a Comment