திரு சந்திரபால் பழக்கடையில் பழங்களை சோதனை செய்கிறார்
உணவகத்தில் சோதனை
உணவுப் பொருட்கள் சோதனை
சைவ உணவக சமையலறையில் சோதனை
ரயிலின் சமையலறைப்பெட்டியில் உணவுப் பொருள் தர சோதனை
பயணிகளிடம் கருத்துக் கேட்பு
சமையலறைப் பெட்டியில் சமையல் எண்ணெயின் தரம் சோதனை
தூய்மை வாரத்தின் ஒன்பதாம் மற்றும் கடைசி நாளான இன்று 25.09.2016 ஞாயிற்றுக்கிழமை
தூய உணவு தினமாக சேலம் கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில்நிலையங்களிலும்
அனுசரிக்கப்பட்டது. இன்று சேலம் கோட்டத்தில் உள்ள ரயில்நிலையங்களில் கோட்ட
கூடுதல் ரயில்வே மேலாளர் திரு சந்திரபால் அவர்கள் தலைமையில்சேலம் கோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால், ரயில்நிலையங்களில் உள்ள உணவகங்கள் மற்றும் ரயில்களின் சமையலறைப் பெட்டிகளில் சுத்தம் பற்றிய ஆய்வுகள் மேறகொள்ளப்பட்டன.
அங்குள்ளபணியாளர்களிடையே சமையலறைக் கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி உணவகங்களை தூய்மையாக பராமரிப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களின்
காலாவதி தேதி மற்றும் தண்ணீர் பாட்டில்களின் தரம் பரிசோதிக்கப்பட்டது. சைவ மற்றும் அசைவ உணவகங்களில் மாவு, மசாலாப் பொருட்கள்
போன்றவையம் பரிசோதிக்கப்பட்டன. ஒரு அசைவ உணவகத்தில் நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தில் கடைசியாக சுத்தம் செய்யப்பட்ட
தேதி இல்லாமல் இருந்ததைக் கண்டு , உடனடியாக அதையும், அடுத்து சுத்தம் செய்ய வேண்டிய தேதியைம்
குறிப்பிட்டு பார்வைக்கு வைக்குமாறு ஆணையிடப்பட்டது. ரயில்களில் சமையலறைப் பெட்டிகள் மற்றும்
உணவு சப்ளை செய்வோரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ரயில் பயணிகளிடையே உணவின் தரம் மற்றம்
அதிகமாக பணம் கேட்கப்படுவது பற்றி விசாரிக்கப்பட்டது.
ரயில் பயணிகள் உணவின் தரம் குறித்து திருப்தி தெரிவித்ததுடன்,
புகார் ஏதும் இல்லை என்றும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment