Monday 9 November 2015

சேலம் ரயில்வே கோட்ட மேலாளரின் 9.11.2015 அன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு



சேலம் கோட்டம் துவக்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு 9/11/2015 அன்று பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. சுப்ரான்சு அவர்கள் கடந்த 8 ஆண்டுகளில் சேலம் கோட்டம் சிறப்பான முறையில் செயல்புரிந்து பயணிகள் வசதி மேம்பாட்டில் பெருமளவில் முன்னேற்றம் செய்து வருவதாக தெரிவித்தார்.

சேலம் கோட்டம் 1.11.2007ல் துவக்கப்பட்ட பிறகு, சேலம் சென்னை எழும்பூர் விரைவு ரயில், கோயம்புத்தூர் மன்னார்குடி செம்மொழி விரைவு ரயில், கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் இடையே 3 அதிகப்படியான பயணிகள் ரயில்கள், சேலம் விருத்தாசலம் இடையே டீசல் மின்தொடர் பயணிகள் ரயில், சேலம் நாமக்கல் கரூர் அகல ரயில்பாதை துவக்கப்பட்ட பின் சேலம் கரூர் பயணிகள் ரயில், மற்றும், கோயம்புத்தூர் ஈரோடு பயணிகள் ரயில் சேலம் வரை நீட்டிப்பு. மங்களூரு பாலக்காடு பயணிகள் ரயில் ஈரோடு வரை நீட்டிப்பு போன்றவற்றை விவரித்தார்.

கீழ்க்கண்ட ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிகள் தற்போது செய்யப்பட்டு வருவதாகவும், மேலும் பல வசதிகள் செய்யப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

சேலம்
தற்போது
ரயில்நிலைய கட்டிட விரிவாக்கம்
3,4 நடைமேடைகளில் புதிய பயணிகள் காத்திருப்பு அறை
புதிய நடைமேம்பாலம் மற்றும் மின்தூக்கிகள்
எதிர்காலம்
பல்நோக்கு பயன்பாட்டு வளாகம்
சேலம் ரயில்நிலைய இரண்டாம் நுழைவு வாயில்
புதிய குளிர்வசதி செய்யப்பட்ட பயணிகள் காத்திருப்பு அறை
புதிய உணவக வளாகம்

கோயம்புத்தூர்
தற்போது
புதிய தரைக்கீழ்ப்பாதை 2 மின்ஏணிகள் எஸ்கலேட்டர் மற்றும் மின்தூக்கிகளுடன் லிப்ட்
உணவக வளாகம் மேம்பாடு
புதிய சைவ உணவகம்
எதிர்காலம்
மேலும் 2 லிப்ட்கள்

ஈரோடு
தற்போது
புதிய குளிர்வசதி செய்யப்பட்ட பயணிகள் காத்திருப்பு அறை
ரயில் நிலையம் முன்னர் தோட்ட வளாகம் மேம்பாடு
ரயில்வே காலனிகளில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டன
எதிர்காலம்
மேலும் 2 லிப்ட்கள்

மேட்டுப்பாளையம்
தற்போது
உடற்குறையுள்ளோர் எளிதில் உபயோகிக்க வல்ல புதிய கழிவறை
நீலகிரி மலை ரயில் அருங்காட்சியகம்
புதிய சைவ உணவகம்
எதிர்காலம்
4 ரயில்பெட்டிகள் கொண்ட முழுநீள ரயில் நிற்க வசதியாக நடைமேடை நீட்டிப்பு

திருப்பூர்
தற்போது
ரயில்நிலைய 2ம் நுழைவுவாயில்
புதிய பயணிகள் காத்திருப்பு அறை
ரோட்டரி சங்கம் உதவியுடன் சுத்திகரிக்கப்பட்ட ஆர்ஓ குடிநீர் வழங்கும் வசதி
எதிர்காலம்
உணவக வளாகம்
சரக்கு முனைய மேம்பாடு

ஈரோடு
தற்போது
புதிய குளிர்வசதி செய்யப்பட்ட பயணிகள் காத்திருப்பு அறை
ரயில் நிலையம் முன்னர் தோட்ட வளாகம் மேம்பாடு
ரயில்வே காலனிகளில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டன
எதிர்காலம்
மேலும் 2 லிப்ட்கள்

கரூர்
தற்போது
வாகன நிறுத்த வசதி
ரயில்நிலைய வளாக சுவர்களை மாசுபடுத்துவதை தவிர்க்க தன்னார்வத் தொண்டர்கள் உதவியுடன் சுவர் சித்திரங்கள்
எதிர்காலம்
புதிய பயணிகள் தங்கும் அறைகள்

வடகோவை
தற்போது
புதிய ரயில்நிலைய கட்டிடம்
புதிய பயணச்சீட்டு கவுண்டர்கள்
எதிர்காலம்
வடகோவை ரயில்நிலையத்தில் ரயில் நிறுத்தமாக மாற்றி பெரும்பாலான ரயில்களை அங்கே நிறுத்தி கோவை ரயில்நிலையத்தில் கூட்ட நெரிசல் குறைப்பு

தொட்டிப்பாளையம் மற்றும் விஜயமங்கலத்தில் புதிய ரயில்நிலைய கட்டிடங்கள்
மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், சேலம் டவுன், சின்ன சேலம், மற்றும் ஆத்தூர் உள்ளிட்ட 9 முக்கிய ரயில்நிலையங்களில் ஸ்மார்ட் கார்ட் மூலம் இயங்கும் 15 தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் கருவிகள்
ஈரோடு ரயில் நிலையத்தில் விரைவில் காசு மற்றும் ரூபாய் நோட்டுகள் மூலம் இயங்கும் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் கருவி
குறைந்த விலையில் சுத்தமான குடிநீர் வழங்க அனைத்து முக்கிய ரயில்நிலையங்களிலும் 40 தானியங்கி தண்ணீர் வழங்கும் கருவிகள்
ராசிபுரம் மற்றும் நாமக்கல் தபால் நிலையங்களில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள், மேலும் 6 புதிய தபால் நிலைய ரயில் பயணச்சீட்டு மையங்கள்
ஈரோட்டில் ரயில்பயணிகள் வசதிக்காக கூடுதல் நேரம் செயல்டும் யாத்ரி டிக்கட் சுவிதா கேந்திரம் எனப்படும் தனியார் முன்பதிவு பயணச்சீட்டு மையம்
பயணிகள் புகாருக்கான எண்கள் 138 பொதுப்புகார்கள் மற்றும் 182 பாதுகாப்புப்புகார்கள்
சங்ககிரி, குளித்தலை, மற்றும் கொடுமுடியில் நடைமேம்பாலங்கள்
சேலம் கோயம்புத்தூரில் பேட்டரியால் இயங்கும் கார்கள்
சேலம், கரூர், மற்றும் ஈரோட்டில் பயணிகள் அவசர மருத்துவ உதவி மையம்
சேலம் கோட்டத்தின் முக்கிய ரயில்நிலையங்களில் பயணிகள் தங்கும்  அறை இணையதளம் மூலம் முன்பதிவு வசதி

ஊழியர்கள் மேம்பாட்டில், கரூரில் 44 ஊழியர் குடியிருப்புகள், ஈரோட்டில் புதிய மருத்துவமனை, சேலத்தில் ஊழியர் பொழுதுபோக்கு மையம், கரூரில் கல்யாண மண்டப புதிப்பிப்பு

பொருளாதார வளர்ச்சி (ரூபாய்களில்)
பயணிகள் வருவாய் கடந்த ஆண்டின் (ஏப்ரல் முதல் அக்டோபர் வரை) 261.34 கோடியிலிருந்து 8.08% அதிகரித்து 282.44 கோடியாக உயர்ந்துள்ளது.

இதர வருவாய் கடந்த ஆண்டின் (ஏப்ரல் முதல் அக்டோபர் வரை) 6.10 கோடியிலிருந்து 0.55% அதிகரித்து 6.13 கோடியாக உயர்ந்துள்ளது.  

பயணச்சீட்டு பரிசோதனை மூலமான வருவாய் கடந்த ஆண்டின் (ஏப்ரல் முதல் அக்டோபர் வரை) 259.98 லட்சத்திலிருந்து 10.09% அதிகரித்து 286.20 லட்சமாக உயர்ந்துள்ளது. இதற்காக 18,619 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

பார்சல் வருவாய் கடந்த ஆண்டின் (ஏப்ரல் முதல் அக்டோபர் வரை) 1207.06 லட்சத்திலிருந்து 1.02% அதிகரித்து 1219.40 லட்சமாக உயர்ந்துள்ளது

உணவு வழங்கல் மூலமான வருவாய் கடந்த ஆண்டின் (ஏப்ரல் முதல் அக்டோபர் வரை) 84.62 லட்சத்திலிருந்து 118,45% அதிகரித்து 184.85 லட்சமாக உயர்ந்துள்ளது

தற்போது செயல்பட்டு வரும் திட்டங்கள் : ஓமலூர் மேட்டூர் அணை ரயில்பாதை இரட்டிப்பு பணிகள், இரண்டாண்டுகளில் முடிக்கப்படும்.

பாதுகாப்பு
ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் ரயில் வருவதை அறிவிக்கும் தானியங்கி கருவி கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் தடத்தில் அறிமுகம்

சேலம் கோட்டத்தில் உள்ள 60 ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் பயணிகளுக்கு அறிவுறுத்தி ரயில் வரும்போது ஒழுங்கு படுத்த கேட்மித்ராக்கள் நியமனம்

பசுமை சக்தி மற்றும் சக்தி சேமிப்பு நடவடிக்கைகள்
கோயம்புத்தூர், திருப்பூர், போத்தனூர் மற்றும் சேலம் ரயில் நிலையங்களில் சூரிய சக்தியால் இயங்கும் வெந்நீர் அமைப்பு
திருப்பூர் ரயில் நிலையத்தில் 2.88 கிலோவாட் சக்தி சூரிய மின்சக்தி தயாரிக்கும் அமைப்பு
கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் ரயில்தடத்தில் உள்ள லெவல் கிராசிங்குகளில் சூரிய சக்தி விளக்குகள்
ஈரோடு ரயில்நிலையத்தில் நடைமேடை விளக்குகளை மொபைல் போனால் இயக்கும் வசதி
கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் அதிக காற்று வழங்கும் 40 சதவீத மின்சக்தி சேமிக்கும் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கவல்ல 24 சூப்பர் மின்விசிறிகள்
தற்போதுள்ள 600 வாட் அதிகசக்தி கொண்ட பொது விளக்குகளை மின்சக்தி சேமிக்கும் சிஎப்எல் விளக்குகள்
மொத்தம் 100 கிலோவாட் மின்சக்தி தயாரிக்கும் அமைப்புகள் சேலம் கோட்டத்தின் பல இடங்களிலும் நிறுவுதல்



2 comments:

  1. It will be ideal if a new line is constructed between Pollachi and Karur, so that the Palakkad Jn.– Palakkad Town - Kollengode – Pollachi – Dharapuram – Karur link will become a busy link between Malabar region/ Coastal Karnatak/Goa/ Mumbai and Maharashtra and Trichy , the city situated in the centre of Tamil Nadu.

    Southern railway had already affirmed the potential for promoting a new train route between Pollachi and Thiruvananthapuram while the Pollachi- Kollengode - Palakkad stretch waits for introduction of trains. In fact the said route would have become more attractive by creating the direct rail corridor from Pollachi to Thrissur ( a Chord line) by-passing the busy Palakkad by implementing the pending ( or shelved?) Kollengode - Thrissur railway line, which will be useful for the faster movement of Containers between Tuticorin and Kochi Ports.

    Kollengode – Thrissur, the proposed new railway line that facilitates a straight rail-route between Pollachi and Thrissur offers adequate scope to operating round the clock pilgrim shuttle services between Palani and Guruvayur (Guruvayur – Thrissur – Kollengode – Pollachi – Udumalaipet- Palani) to cover a distance of 176 K.m within four hours.

    Kollengode – Thrissur line, if becomes reality will create a shortest route from Madurai/Tiruchcchi regions in Central Tamil Nadu to the ThrissurKochi regions of Kerala state. Trains between the Madurai/Tiruchchi and Thrissur, Guruvayur, Ernakulam, Alleppy etc. can be operated through Pollachi – Kollengode – Thrissur route, by-passing the traffic saturated Palakkad – Ottappalam – Shoranur/ Thrissur sections. Trains towards Malabar region, Mangalore and beyond through Konakan railways to Uduppi, Goa, Mumbai etc. can move through Pollachi- Kollengode- Thrissur- Shoranur Jn. as well as through Pollachi-Kolengode – Palakkad - Shoranur.

    Once the Kollengode – Thrissur railway becomes a reality, the Thrissur – Kollengode – Pollachi – Dharapuram – Karur link ( by-passing Palakkad ) will be a straint-line ( Chord line) which will reduce the distance between Central Kerala/ Kochi region and Trichy, of course Chennai ( Via. Vridhachalam – Villupuram to Chennai Egmore) as well.

    ReplyDelete
  2. Yes. Karur will become connected directly with all the main junctions, once this happens.

    ReplyDelete