Wednesday 25 January 2017

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் 68வது குடியரசு தின விழா


 ரயில்வே கோட்ட மேலாளர் கொடியேற்றி வணங்குகிறார்
 ரயில்வே கோட்ட மேலாளர் அணிவகுப்பை பார்வையிடுகிறார்
 ரயில்வே கோட்ட மேலாளர் உரையாற்றுகிறார்

 மோப்பப்டை நாய்களின் சாகச நிகழ்ச்சி

 பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள்

பாரத மாதா போல் வேடமணிந்த ஓரு குழந்தை

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் 68வது குடியரசு தின விழா இன்று (26.01.2017) விமரிசையாக கொண்டாடப்பட்டது.  சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரி சங்கர் வர்மா அவர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து ரயில்வே பாதுகாப்புப்படை வீர்ர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

விழாவில் பேசுகையில், திரு. வர்மா, சாதாரண குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்க இந்திய அரசியலமைப்பு சட்டம் இந்த நாளில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதை நினைவு கூர்ந்தார். தெற்கு ரயில்வே பொது மேலாளர் திரு வசிஷ்ட ஜோஹிரி அவர்களது செய்தியையும் அவர் விழாவில் வாசித்தார் (பொது மேலாளரின் உரையின் ஆங்கில மூலம் இந்த செய்திகுறிப்பின் இறுதியில் தரப்பட்டுள்ளது.)

பின்னர், அவர் உரையாற்றுகையில், சேலம் கோட்டத்தின் மொத்த வருவாய் 2015-16ல் (ஏப்ரல் முதல் டிசம்பர் வரை) 447.07 கோடியில் இருந்து 2016-17ல் 472.42 கோடியாக, அதாவது 5.67 சதவீதம் உயர்ந்திருப்பதாவும், பயணிகள் வசதிக்காக கோயம்புத்தூர் மற்றும் சேலம் ரயில்நிலையங்களில் குளிர்வசதி செய்யப்பட்ட தங்குமிடங்களும், காத்திருப்பு அறைகளும், நகரும் மின்படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சொன்னார்.  நவஜீவன், கொங்கு, ராஜ்கோட் மற்றும் ஜனசதாப்தி ரயில்களில் ரயில்பராமரிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இவை இதர ரயில்களுக்கும் விரைவில் விரிவு படுத்தப்படும் என்றும் சொன்னார்.  ஈரோடு ரயில்நிலையத்தில் ரயில்பெட்டிகளுக்கு நீர் நிரப்ப 1.28 கோடி செலவில் அதிநவீன நீர் நிரப்பும் அமைப்பு நிறுவப்பட்டுள்ளதாகவும், 35 ரயில்பெட்டிகளில் 140 பயோடாய்லட்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், கோயம்புத்தூர் ராமேஸ்வரம் பசுமை ரயில் உள்பட்ட பல ரயில்ளின் 120 ரயில்பெட்டிகளில் இவை விரைவில் பொருத்தப்பட உள்ளதாகவும் சொன்னார்.  நாட்டில் முதன் முறையாக கோயம்புத்தூர் மயிலாடுதுறை ஜனசதாப்தி ரயிலில் சூரிய மின்சக்தி பேனல்கள் பொருத்ப்பட்டு சோதனைகள் மேற்கொள்ப்பட்டு வருவதாவும், ரயில்வே வாரியத்தின் அனுமதியுடன் இவை பிற ரயில்பெட்டிகளிலும் பொருத்தப்படும் என்றும் அவர்  சொன்னார். 

சேலம் கோட்டத்தின் ரயில்களின் நேரப்படியான இயக்கம் கடந்த ஆண்டில் 86.59 சதவீதத்தில் இருந்து இந்த ஆண்டு 90.4 சதவீதமாக உயர்ந்திருப்பதாகவும், ஏப்ரல் முதல் டிசம்பர் வரை சேலம் கோட்டத்தில் 763 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்

ஊழியர்கள் நலனுக்காக சேலம் கோட்டம் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியாவுடன் இணைந்து, ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் மற்றும் அவர் குடும்பத்தினர் அங்கீகரிக்கப்பட்ட மருத்துமனைகளில் அவசர சிகிச்சை பெறும் வகையில் ஸ்மார்ட் கார்டுகள் அறிமுகம் செய்யப்படும் என்றும், ஊழியர்களின் பணியேடுகள் ஸ்கேனிங் செய்யப்பட்டு பாதுகாக்கப்படும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் சொன்னார். 


ரயில்வே பாதுகாப்புப் படையினர் ரயில்வே சொத்துக்களை திருடிய 17 பேரை கைது செய்து ரயில்வே பொருட்களை அவர்களிடம் இருந்து மீட்டிருப்பதாகவும், ரயில்வே வளாகங்களை அசுத்தம் செய்த்தற்காக 1219 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 1.94,800 அபராதம் வசூல் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  போத்தனூரில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படையின் மோப்ப நாய்ப்படை பயிற்சி மையம் தேசிய அளவிலான பயிற்சி மையமாக 2.20 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு 50 மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்க வசதிகள் செய்யப்படும் என்றும் சொன்னார்.  

ரயில்வே பாதுகாப்பு படையின் நாய்ப்படை சாகசம், ரயில்வே பள்ளிகளின் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றன.  விழாவில், சேலம் கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் திரு சந்திரபால், கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையர் திரு ராஜ்மோஹன், மற்றும் இதர கோட்ட அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். 

Text of Message from General Manager, Southern Railway 

General Manager’s Message
68th Republic Day
26th January 2017

All my dear Railwaymen & their family members,
Members of Press and Media, Ladies and Gentlemen and dear Children,

Very Good morning to  all!. 

On the occasion of 68th Republic Day of our beloved Nation today, it is my privilege to extend my best wishes and greetings to all of you.  Ever since we adopted our constitution on January 26th 1950 noble ideals of equality, justice and harmony formed the basis of governance of our Nation, and entire population of our country without any bias or discrimination could participate in a democratic way towards the building of our nation. This day gives us an opportunity to respectfully remember the great leaders and freedom fighters without whose contribution this would not have been possible.  It is a matter of great pride for all of us that now we are the most populous democratic country in the world having power in the hands of common people. I am sure that the patriotic fervour and festivities today will encourage all of us to keep our democracy strong and vibrant and motivate us to work towards making our nation great. Reflecting the ethos and values enshrined in our constitution, Southern Railway with its hardworking and dedicated employees, fosters unity, national integration and contributes to economic development of our country.

Our performance this year up to December 2016, has shown marginal decline over  last year, apportioned earnings are  down by 1.8% at Rs. 5505 cr. Though .our originating passenger earnings of    Rs. 3470 cr. reflects marginal increase of  4% over last year but the Freight earnings are down  by 8.6% at Rs.1774 cr. Total No. of passengers carried by us is slightly higher by 0.4% to 600 millions but our  freight loading at 23.8MT is down by 3.6% .over  last year.  We also handled new stream of freight traffic i.e Petcoke from Manglaore Port and movement of Naphtha from Irumpanam to Numaligarh. 4 new goods sheds were also opened. With various concessions and incentives announced by Railway Board, our  freight  traffic is expected to pick up.

I would like to highlight  some of the important achievements made so far this year.

On our capacity addition and augmentation works, Southern Railway has commissioned 85 km of doubling in 273 km stretch of Villupuram – Dindigul section this year, leaving only about  93 km, which is also targeted for completion by March 2017. This will boost our connectivity to South Tamil Nadu.  5th  and 6th  line between Chennai Central and Basin Bridge as well as 4th  line between Tiruvallur and Arakkonam  were commissioned this year, giving us quadrupled 60 km line between Chennai and Arakkonam with dedicated suburban corridor, greatly  improving  the running of M/E trains and suburban   trains. Doubling of track has also been completed and commissioned for traffic for 13 km between Piravam road and Kuruppantara and  9 km between Tiruvalla and Chengannur  in  Ernakulam-Kottayam-Kayankulam project in the state of Kerala.  9km of doubling between Tiruvalla and Chengannur,  40 km Gauge conversion between Pollachi and Podanur , 8 km Gauge conversion between Punalur and Edaman and 5.9 km of doubling between Jakkote and Panambur have been completed and will be commissioned soon.

On operations front, a record number of 42 M/E trains have been speeded up this year and 8 M/E trains were upgraded into superfast express trains. We introduced 3 weekly trains (Kochuveli-Indore, Hatia-Ernakulam and Kamakya-Bangalore)..  Upto December 2016,  SR operated -
1151 reserved Special trains i.e.Premium and Suvidha specials (8% increase over the last year).
7954 unreserved specials, (98% increase over the last year), 138 Sabarimala specials  and 18  pairs of IRCTC Specials.
2708 coaches were temporarily augmented and   76 coaches were permanently augmented   (3% increase over the last year).
7 new DEMU rakes of 1400 HP were added.
On suburban side, 59 cross-sectoral services were introduced connecting MRTS with SWL and NE line and the punctuality of trains was improved significantly. 
To improve passenger comfort, LHB coaches were introduced  in Pandian Express, Rockfort Express, Mangalore Express and Thiruvanathapuram Mail.

In spite of several constraints, we were able to  maintain overall punctuality of 88 %.

In tune with the commitments made by Hon’ble MR in his Budget speech, Southern Railway focused more on the comfort and quality of journey of our customers  and provided various Passenger Amenities this year.  As against the allotment of Rs.63.cr this year, Southern Railway spent Rs. 52.cr. (82% of the Budget grant)  till December 2016 towards Passenger Amenities. We developed 105 stations as Adarsh stations and 23 more stations are under progress. 36 stations of religious importance are being developed with additional facilities. 3 stations are being planned in association with Ministry of Tourism.  AC paid waiting halls were developed at 11 stations.  Executive lounges are planned to be set up at 5 major stations. High speed Wi fi services are functional at 15 major stations over Southern Railway. Video wall and Electronic display boards are functional in 3 major stations.

For the first time in IR, “Women facilitation centres” have been opened at 6 major stations and are equipped with all necessary services round the clock greatly helping our women travellers. Janani sewa has been introduced in 14 stations, and IRCTC supported  E catering has been started in 176 trains and in 37 stations. Jan Aahar with improved facility and local cuisine are functional at Chennai Central, Erode and Kanyakumari. 14 Escalators at 9 stations and 2 lifts at Chennai Egmore have been commissioned this year. Works for 19 Escalators and 35 lifts are in progress.  Battery operated Cars at 8 major stations and Emergency medical centres at 15 major stations are greatly helping our passengers.  Working towards cash less transactions, PoS machines are now  available in 42 PRS counters and 70 suburban stations and all PRS counters will have this facility by March’17.  GPS based passenger information system with both visual display and audio announcement have also been provided in 60 EMU/MEMU rakes  in suburban and MRTS sections. 

In our effort  to keep the trains and stations clean,  5033  bio toilets are available in 1552 coaches, which is 23% of Southern Railway’s coach population.  On Board House Keeping System is operational in  28 trains and 10 more trains will be covered shortly.  As a testament to our cleanliness effort, in the  first nationwide cleanliness survey, Kumbakonam and Salem stations of Southern Railway came among top    10 cleanest stations and 3 Divisions Salem,Tiruchchirappalli and Madurai came among best 15 Divisions in Indian Railways.  Many such initiatives are continued to be undertaken in this direction. 

Safety is always accorded top most importance in our operations. 91 unmanned LCs and 27 manned  LCs were eliminated. 22 LC gates have been interlocked.  15 ROBs/RUBs were completed and commissioned for traffic and 60 bridges were rehabilitated.  Southern Railway has also undertaken various important  track safety works.  On security front, RPF team promptly acted on 942  messages on 182 helpline and assisted 846 passengers. 615 missing/abandoned children were rescued and handed over to parents/NGOs.

Financial assistance of Rs.5.9 cr has been extended to Railwaymen under various scholarship/schemes of Central Staff Benefit Fund. Pension Adalat was conducted clearing 1029 applications out of 1312 addressing the grievances of retired officials. Issue of e-PPOs has been started from this year.  Adhaar enrolment camp was also conducted benefitting 61234 serving and retired employees. 977 Health Awareness and 286 medical screening camps were conducted in the Zone benefitting 19118 beneficiaries. Ayush medical facility was added to Railway Hospital, Perambur, which is well known for various specialities over Indian Railways.

I compliment students and staff of Ashraya school, functioning under the aegis of SRWWO for performing exceptionally well and for bagging the Best Staff award by Rotary Club of Ambattur  this year.  I convey my  best wishes to SRWWO  for conducting various welfare activities for the staff and their families.

I congratulate Chess player Sh. K Ratnakaran and coach   Sh V Ravichandran who won Gold medal beating Russia in USIC World Railway Chess championship games. I congratulate Sh. Rafath Habib who won Silver in team snooker event and Sh. S. Dilip Kumar who were selected to represent India in IBSF World Snooker event held at Egypt. I congratulate all the Sportspersons who participated and brought laurels to Southern Railway in various National and International games and  I  wish them for their continued success. I also congratulate   Sh Manikandan, Asst Commissioner, St John Ambulance Brigade  who has been awarded with President’s Gold medal.

I would like to extend my best wishes to our recognised  trade union and associations, who have been a source of strength in the pursuit of our achievements and excellence.

I would like to thank and congratulate all Officers, supervisors and staff of Southern Railway who have performed exceptionally well for the achievements this year and I wish them all, their families and  their children, a bright future and good luck in all their endeavours. I am sure with the active participation of such dedicated and motivated Railwaymen, Southern Railway will continue to achieve all its targets and actively serve the people of India, making our nation proud.

I once again convey my best wishes to one and all here.

 Jai Hind!!

Friday 20 January 2017

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் ரயில்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்த கருத்தரங்கு

திரு ஹரிசங்கர் வர்மா உரையாற்றுகிறார்
திரு சத்யகுமார் அவர்களின் உரை
திரு ராஜ்குமார் அவர்களின் வரவேற்பு உரை
 திரு சந்திரபால் அவர்கள் பேசுகிறார்
கருத்தரங்கில் கலந்து கொண்டோர்

ரயில்களை பாதுகாப்பாக விபத்துகள் இன்றி இயக்க, இந்திய ரயில்வே தனது கீழ்மட்ட ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. தெற்கு ரயில்வேயின் அனைத்து கோட்டங்களிலும் இது குறித்த கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, இன்று (20.01.2017),  தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் ரயில்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்த கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில், ரயில்வே வாரிய செயல் இயக்குநர் திரு. ஜி.வி.எல் சத்தியகுமார் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.  கருத்தரங்கில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. ஹரிசங்கர் வர்மா, கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் திரு சந்திரபால், மற்றும் பிறதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  இயந்திரவியல், மின்னியல், இயக்கவியல் துறைகளின் பொறுப்பு அதிகாரிகள் பாதுகாப்பான ரயில் இயக்கம் குறித்து உரையாற்றினர்.  

திரு சத்தியகுமார் அவர்கள் பேசுகையில், ரயில் விபத்துகள் திடீரென ஒரு நாள் நடக்கும் நிகழ்வல்ல, பல நாட்கள் சோதனை செய்யாதிருத்தல், பல நாட்கள் பராமரிக்காதிருத்தல், போன்ற குறைபாடுகளின் வெளிப்பாடே என்றும், பராமரிப்புக்கும், பாதுகாப்பான ரயிலியகத்திற்கும் அதிக கவனம் செலுத்தினால் விபத்துக்கள் குறையும் என்றும் குறிப்பிட்டார்.  இக்குறைபாடுகளைக் களைவதால், ரயில்களை நேரப்படி இயக்க முடிவதுடன், ரயில்களின் பாதுகாப்பும் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.   

திரு ஹரிசங்கர் வர்மா அவர்கள் தனது உரையில், சேலம் கோட்டம் நேரப்படியான முன்னெச்சரிக்கை ஆய்வுகள் மூலமும், சரியான பராமரிப்பின் மூலமும், விபத்துக்கள் இன்றி ரயில்களை இயக்கும் குறிக்கோளை அடைய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும், ஒவ்வொருவரும் தங்களது பங்கினை உணர்ந்து பணியாற்றினால், தவறுகள் நடக்காமல் தவிர்க்க முடியும் என்றும் சொன்னார். 

முன்னதாக சேலம் கோட்ட முதுநிலை பாதுகாப்பு அதிகாரி திரு எஸ்/ ராஜ்குமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். சேலம் கோட்ட முதுநிலை மின்பொறியாளர் திரு. எம். பிரபாகரன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். 

Tuesday 17 January 2017

முன்பதிவற்ற பயணச்சீட்டு பதிவு செய்யும் “UTSONMOBILE” செயலி தெற்கு ரயில்வே சேலம் கோட்ட ரயில்நிலையங்களில் அறிமுகம்



ரயில்பயணிகளுக்கு உதவும் பொருட்டு தெற்கு ரயில்வே மொபைல் மூலம் முன்பதிவற்ற பயணச்சீட்டு பதிவு செய்யும் “UTSONMOBILE”  செயலியை (app) தற்போது இதர இடங்களில் உள்ள பயணிகளும் பயன்படுத்தும் பொருட்டு சில மாறுதல்களுடன் அறிமுகம் செய்துள்ளது.

இதன் படி, பயணிகள் தங்கள் மொபைல் போனில் “UTSONMOBILE”  செயலியை (app) நிறுவிதானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ள  சேலம் கோட்ட ரயில் நிலையங்களான சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, மேட்டுப்பாளையம், கரூர், சேலம் டவுன், ஆத்தூர், சின்ன சேலம் ரயில் நிலையங்களில் இருந்து பயணம் செய்வதற்கான   தங்களது முன்பதிவற்ற பயணச்சீட்டுகளை  தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு மொபைல் போன் மூலம் முன்பதிவற்ற பயணச்சீட்டுக்களை பெற, கீழ்க்கண்டவாறு செய்யவும்:

1. தங்களது ஆண்ட்ராய்டு அல்லது விண்டோஸ் மொபைலில் “UTSONMOBILE”  செயலியை (app) பதிவிறக்கம் செய்து நிறுவி, பின்னர் தங்களது மொபைல் எண்ணை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

2. குறைந்த பட்சம் 100 ரூபாய்க்கு ரயில்வே வாலட் (R-wallet-Railway Wallet)  மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.

3. மேற்கண்ட ரயில்நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் மூலம் தங்களது மொபைல் எண் மற்றும் பயணச்சீட்டு பதிவு எண்ணை பதிவு செய்து பயணச்சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும்

4. பிரிண்ட் செய்யப்பட்ட பயணச்சீட்டு இல்லாமல் பயணிகள் ரயில்களில் பயணிக்க இயலாது. 

பயணிகளுக்கு மேற்கண்டவாறு தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் மூலம் முன்பதிவற்ற பயணச்சீட்டுகளை பெறுவதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், அவர்கள் அந்த ரயில்நிலையங்களில் உள்ள முன்பதிவற்ற பயணச்சீட்டு அலுவலகத்தையோ, www.utsonmobileindrail.gov.in என்ற இணையதளத்தையோ, அல்லது பயணிகள் உதவி எண்: 044-25351621ஐ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.