Tuesday 17 January 2017

முன்பதிவற்ற பயணச்சீட்டு பதிவு செய்யும் “UTSONMOBILE” செயலி தெற்கு ரயில்வே சேலம் கோட்ட ரயில்நிலையங்களில் அறிமுகம்



ரயில்பயணிகளுக்கு உதவும் பொருட்டு தெற்கு ரயில்வே மொபைல் மூலம் முன்பதிவற்ற பயணச்சீட்டு பதிவு செய்யும் “UTSONMOBILE”  செயலியை (app) தற்போது இதர இடங்களில் உள்ள பயணிகளும் பயன்படுத்தும் பொருட்டு சில மாறுதல்களுடன் அறிமுகம் செய்துள்ளது.

இதன் படி, பயணிகள் தங்கள் மொபைல் போனில் “UTSONMOBILE”  செயலியை (app) நிறுவிதானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ள  சேலம் கோட்ட ரயில் நிலையங்களான சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, மேட்டுப்பாளையம், கரூர், சேலம் டவுன், ஆத்தூர், சின்ன சேலம் ரயில் நிலையங்களில் இருந்து பயணம் செய்வதற்கான   தங்களது முன்பதிவற்ற பயணச்சீட்டுகளை  தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு மொபைல் போன் மூலம் முன்பதிவற்ற பயணச்சீட்டுக்களை பெற, கீழ்க்கண்டவாறு செய்யவும்:

1. தங்களது ஆண்ட்ராய்டு அல்லது விண்டோஸ் மொபைலில் “UTSONMOBILE”  செயலியை (app) பதிவிறக்கம் செய்து நிறுவி, பின்னர் தங்களது மொபைல் எண்ணை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

2. குறைந்த பட்சம் 100 ரூபாய்க்கு ரயில்வே வாலட் (R-wallet-Railway Wallet)  மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.

3. மேற்கண்ட ரயில்நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் மூலம் தங்களது மொபைல் எண் மற்றும் பயணச்சீட்டு பதிவு எண்ணை பதிவு செய்து பயணச்சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும்

4. பிரிண்ட் செய்யப்பட்ட பயணச்சீட்டு இல்லாமல் பயணிகள் ரயில்களில் பயணிக்க இயலாது. 

பயணிகளுக்கு மேற்கண்டவாறு தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் மூலம் முன்பதிவற்ற பயணச்சீட்டுகளை பெறுவதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், அவர்கள் அந்த ரயில்நிலையங்களில் உள்ள முன்பதிவற்ற பயணச்சீட்டு அலுவலகத்தையோ, www.utsonmobileindrail.gov.in என்ற இணையதளத்தையோ, அல்லது பயணிகள் உதவி எண்: 044-25351621ஐ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.    

No comments:

Post a Comment