Saturday 27 February 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தின் முக்கிய 5 ரயில்நிலையங்களில் கட்டணமின்றி இயங்கும் பிஎம்ஐ காட்டும் கருவி நிறுவப்பட்டுள்ளது



இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆணின் சாராசரி எடை 60கிலோவாகவும், பெண்களுக்கு 55 கிலோவாகவும் நிர்ணயம் செய்துள்ளது. இந்த குழுவின் பரிந்துரைபடி, 18 முதல் 29 வயதுக்கு உள்பட்ட சராசரி ஆணின் எடை 60 கிலோவாகவும், உயரம் 1.73 மீட்டராகவும், பி.எம்.. (பாடி மாஸ் இன்டெக்ஸ்) 20.3 ஆக இருந்தால், ஆரோக்கியமான, சராசரி மனிதராக இருப்பார். 18 முதல் 29 வயதுக்கு உள்பட்ட சராசரி பெண்ணின் எடை 55 கிலோவாகவும், உயரம் 1.61 மீட்டராகவும், பி.எம்.. (பாடி மாஸ் இன்டெக்ஸ்) 21.2 ஆக இருந்தால், ஆரோக்கியமான, சராசரியான பெண்மணியாக இருப்பார்.

இந்த எடை மதிப்பிற்கு சாதாரண வேலை பார்க்கும் ஆணாக இருந்தால் 2,730 கிலோ கலோரியும், அதுவே கடின வேலையாக இருந்தால் 3,490 கிலோ கலோரி தேவைப்படும். பெண்ணாக இருந்தால் முறையே 1,900 மற்றும் 2,230 கிலோ கலோரியும், கடின வேலைக்கு 2,850 கிலோ கலோரியும் தேவையாக இருக்கும்,

இவற்றை சாதாரண மனிதர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் தெரிந்து கொண்டு அதன்படி செயல்படுவது என்பது சற்றே கடினமான செயலாகும். ரயில்வே பயணிகளுக்கு தங்களது பிஎம்ஐ தெரிந்து கொண்ட அதற்கேற்ப ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்ள வழிகாட்டும் பொருட்டு தெற்கு ரயில்வே சேலம்  கோட்டம் தனது முக்கிய 5 ரயில்நிலையங்களில் கட்டணமின்றி பிஎம்ஐ காட்டும் கருவிகளை தற்போது நிறுவியுள்ளது.

முன்பு ரயில்நிலையங்களில் காசுகள் கொண்டு இயக்கப்படும் எடைகாட்டும் கருவி போலவே செயல்படும் இந்த பிஎம்ஐ கருவிகள் கட்டணம் ஏதுமின்றி உபயோகிப்பாளரின் எடை, உயரம் மற்றும் பிஎம்ஐ (அதாவது உடல்பருமன் குறைந்த உடல் எடை, ஆரோக்கியமான rரியான எடை, சற்றே அதிகமான எடை மற்றும் பருமனான எடை) போன்றவற்றை காட்டுவதுடன் அவரது பிஎம்ஐக்கு எவ்வளவு தண்ணீர் ஒரு நாளைக்கு பருக வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை வழங்கும்.  உபயோகிப்பாளர் விரும்பினார் அவர் பதிவு செய்யும் 10 இலக்க மொபைல் எண்ணுக்கு மேற்கண்ட விபரங்களை குறுஞ்செய்தியாக (SMS) அனுப்புவதுடன், மறுமுறை அவர் இந்த இயந்திரத்தை உபயோகிக்கும் போது கடந்த முறை பதிவு செய்யப்பட்ட விபரங்களையும் ஒப்பிட்டு குறுஞ்செய்தி அனுப்பும்.

ஆரஞ்ச் இன்னோவேஷன் மற்றும் ஆம்சாப்ட் சர்வீசஸ் நிறுவனங்கள் மூலமாக நிறுவப்பட்டுள்ள இந்த இயந்திரங்கள் தற்போது சேலம் கோட்டத்தின் சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் ரயில்நிலையங்களில் செயல்படத்துவங்கி உள்ளன.  சுமார் ரூ/2.5 லட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ள இந்த இயந்திரங்கள் விளம்பர வருமானம் மூலமாக செயல்படுவதால் இந்த இயந்திரங்களுக்கு ரயில்வே நிர்வாகம் எந்த ஒரு செலவும் செய்யத் தேவையில்லை. மேலும், இந்த இயந்திரங்களை நிறுவியுள்ள நிறுவனங்கள் ரயில்வேக்கு இட வாடகை மற்றும் விளம்பர வருமானத்தில் பங்கும் வழங்கும். 

இந்த இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சேலம ரயில்வே கோட்ட மேலாளர் திரு சுப்ரான்சு இந்த இயந்திரங்கள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ ரயில் பயணிகளுக்கு வழி காட்டும் என்றும் இது போன்ற இயந்திரங்கள் சேலம் கோட்டத்தில் உள்ள மேலும் பல ரயில் நிலையங்களில் நிறுவப்படும் என்றும் தெரிவித்தார்.  

Thursday 25 February 2016

2015-16ம் ஆண்டுக்கான ரயில்வே வரவு செலவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள் மற்றும் சேலம்கோட்டத்திற்கான புதிய அறிவிப்புகள்

2015-16ம் ஆண்டுக்கான ரயில்வே வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்யும் போது மாண்புமிகு மத்திய ரயில்வே அமைச்சர் திரு சுரேஷ் பிரபு வரும் ஆண்டுக்கான பல்வேறு  முக்கிய அம்சங்கள் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் வரும் சேலம் கோட்டத்திற்கான கீழ்க்கண்ட புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

தமிழ்நாடு
2010-11ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு ரயில்வே திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியான ரூ.870 கோடியுடன் ஒப்பிடுகையில் 2016-17ம் ஆண்டில் ரூ. 2064 கோடி  ஒதுக்கப்பட்டுள்ளது.

சேலம் கோட்டம்
சேலம் கோட்டத்திற்கான புதிய திட்டங்கள்

1. மொரப்பூர் தர்மபுரி இடையே ரூ.134 கோடி செலவில் 36 கிமீ தூரத்திற்கான புதிய ரயில் பாதை அமைக்க நில அளவீடு மற்றும் இதர பணிகள்
2. பங்களூரு ஓமலூர் இடையே ஓசூர் வழியாக செல்லும் 196 கிமீ தூர ரயில் தடத்தை ரூ.152.83 கோடி செலவில் மின்மயமாக்கும் திட்டம்

இது தவிர சேலம் கோட்டத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்காக மொத்தம் ரூ.304.48 கோடி செலவில் பல்வேறு பணிகள் புதியதாக மேற்கொள்ளப்பட அறிவிக்கப்பட்டுள்ளது.  
சாலைப்பாதுகாப்பு-சாலை மேம்பாலங்கள் மற்றும் தரைக்கீழ்ப்பாலங்கள் கட்டுதல் : ரூ. 190.29 கோடி
பாலங்கள் பராமரிப்பு மற்றும் மாற்றும் பணிகள் : ரூ. 8.53 கோடி
சிக்னல் மற்றும் தொலைத் தொடர்பு பணிகள் : ரூ. 7.4 கோடி
ரயில் எஞ்சின்கள் மற்றும் வேகன்கள் பராமரிப்பு பணிகள் : ரூ. 33.73 கோடி
ஊழியர் குடியிருப்புகள் புதியதாக கட்டுதல் மற்றும் மேம்பாட்டு பணிகள்: ரூ.19.11 கோடி
பணிகளின் விபரமான பட்டியல் கீழே உள்ளது

Salem Division, Southern Railway – New Projects, Costs and Outlay (allocation) for 2016-17

I.          ROAD SAFETY WORKS-LEVEL CROSSINGS
Name of Works
Sanctioned Cost
Outlay for
2016-17

Rs. in thousands
Salem Division-Remote Terminal
Unit at Interlocked level crossing
gates and strengthening of
networking to Central Data Logger
Server
2,82,03
1
Salem Division-Integrated power
supply of non-blanking of signals
and earth leakage detectors at
level crossings
5,00,00
1
Erode-Coimbatore-Podanur Road
Over Bridge in lieu of LC No.141
with subway
25,45,02
5,00
Coimbatore-Mettupalayam-Road
Over Bridge in lieu of LC No.4
with subway
24,22,37
5,00
Coimbatore-Mettupalayam-Road
 Over Bridge in lieu of LC No.135
with subway
26,01,63
5,00
Coimbatore-Mettupalayam-Road
Over Bridge in lieu of LC No.137
with subway
26,67,67
5,00
Vriddhachalam-Salem-Road Over
Bridge in lieu of LC No.131 with
subway
23,59,63
5,00
Coimbatore-Mettupalayam-Road
Over Bridge in lieu of LC No.5
with subway
24,74,75
5,00
Minnampalli-Salem-Road Over
Bridge in lieu of LC No.1569
with subway
25,20,02
5,00
Salem Vriddhachalam- -Subways
in lieu of LC Nos.80,85&135 (3 Nos)
6,56,23
5,00
TOTAL (Rs. in thousands)
190,29,35
40,02

II.        TRACK RENEWALS
Name of Works
Sanctioned Cost
Outlay for
2016-17

Rs. in thousands
Name of Works
Sanctioned Cost
Outlay for 2016-17

Rs. in thousands
Erode-Irugur-Podanur – 5.0 Kms
4,55,60
10,00
Jolarpettai-Erode Jn. – 12.9 Kms
13,15,89
10,00
Jolarpettai-Erode Jn. – 5.80 Kms
5,91,64
10,00
Jolarpettai-Erode Jn. – 19.95 Kms
6,26,27
10,00
Salem Division-Renewal of
Rail Joints-256 sets
15,52,31
10,00
TOTAL (Rs. in thousands)
45,41,71
50,00

III.       BRIDGE WORKS
Name of Works
Sanctioned Cost
Outlay for
2016-17

Rs. in thousands
Replacement of Steel girders
with PSC Slabs in Bridge No.
44 in Jolarpet-Erode Sec
3,72,41
10,00
Rebuilding RCC Box in Jolarpettai-
Erode Sec Bridge No.20, 135,137,77,
86 &96
4,80,52
10,00
TOTAL (Rs. in thousands)
8,52,93
20,00

III.       SIGNALING AND TELECOMMUNICATION
Name of Works
Sanctioned Cost
Outlay for
2016-17

Rs. in thousands
Salem Divsiion-Provision of
Non-blanking of Signals
3,92,01
1,00
Provision of dual detection on
girder bridges at various stations
3,48,43
1,00
TOTAL (Rs. in thousands)
7,40,44
2,00

IV.       WORKSHOPS
Name of Works
Sanctioned Cost
Outlay for 2016-17

Rs. in thousands
 Erode Electric Loco Shed-
Augmentation of infrastructure
facilities to increase holding from
175 to 200 locos
15,11,06+
1,00,00
10,00+
10,00
Erode Yard-Modernisation with
provision of concrete apron & crane
16,62,03+
1,00,00
10,00+
10,00
TOTAL (Rs. in thousands)
33,73,09
40,00

V.        STAFF QUARTERS
Name of Works
Sanctioned Cost
Outlay for 2016-17

Rs. in thousands
Erode-Replacement of Quarters :
12 Type 2 and 15 Type 4 Quarters
6,28,64
10,00
Salem Division-Improvement of
Staff Quarters-600 units
12,81,87
1,00
TOTAL (Rs. in thousands)
19,10,51
11,00

GRAND TOTAL
(Rs. in thousands)
304,48,03
1,63,02