Friday 5 February 2016

கள்ளக்குறிச்சி சின்ன சேலம் இடையே புதிய அகல ரயில் பாதைக்கு அடிக்கல் நாட்டு விழா

கள்ளக்குறிச்சி சின்ன சேலம் இடையிலான புதிய அகல ரயில்பாதை வரைபடம்

கள்ளக்குறிச்சி சின்ன சேலம் இடையே புதிய அகல ரயில் பாதைக்கு மாண்புமிகு மத்திய ரயில்வே அமைச்சர் திரு சுரேஷ் பிரபாகர் பிரபு அவர்கள் 2016 பிப்ரவரி 7ம் தேதி சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் தமிழக அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இதர முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் அடிக்கல் நாட்டுகிறார்.

2006ம் ஆண்டு அனுமதி பெறப்பட்ட இந்த  அகல ரயில் பாதை திட்டம் தற்போது மத்திய மாநில அரசுகளின் ஒத்துழைப்பால் நிறைவேற உள்ளது.  இந்த ரயில் திட்டத்திற்கான திருத்தப்பட்ட திட்ட மதிப்பீடான ரூ.116.61 கோடியில் தமிழக அரசின் பங்களிப்பான ரூ.64 கோடி ஏற்கனவே பெறப்பட்டுள்ளதால், இந்த சிறப்பு மிகு ரயில் திட்டம் விரைவில் முடிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.  இந்த ரயில் திட்டம் கள்ளக்குறிச்சி வாழ் மக்கள் ரயில் மூலமாக இதர இடங்களுக்கு நேரடியாக செல்ல ஒரு வாய்ப்பாக அமைவதுடன், நாடு சுதந்திரம் பெற்ற பின் அமைக்கப்பட்ட மிகச்சில புதிய ரயில் திட்டங்களில் ஒன்றாக அமைந்து நாட்டின் ரயில்வே வரைபடத்தில் கள்ளக்குறிச்சியை இடம் பெறச் செய்ய உள்ளது. 

இத்திட்டத்தின் முதல் கட்டமாக  சின்ன சேலம் கள்ளக்குறிச்சி இடையே 16.20 கிமீ தொலைவுக்கு புதிய அகல ரயில் தடம் பதிக்கப்பட உள்ளது. இதில் 2 பெரிய பாலங்களும், 22 சிறிய பாலங்களும், 1 ரயில்தட மேம்பாலமும், 10 தரைக்கீழ்பாலங்களும் அமைய உள்ளன. பாதையில் மூன்று லெவல் கிராசிங்குகள் அமைய உள்ளன. அவற்றில் ஒன்று ஏற்கனவே, சேலம் விருத்தாசலம் அகல  ரயில் பாதையில் உள்ளது. இந்த ரயில் திட்டத்திற்காக 47.62 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளில் ரயில் தடம் விழுப்புரம் விருத்தாசலம் தடத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை வரை நீட்டிக்கப்பட உள்ளது. அதற்காக நில அளவைப்பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டு மத்திய ரயில்வே வாரியத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் அமைய உள்ள ரயில் நிலையத்தின் ஊழியர்களுக்காக 18  குடியிருப்புகள் அமைக்கப்பட உள்ளன.

கள்ளக்குறிச்சி சேலம் இடையிலான இந்த புதிய அகல ரயில் பாதை முடிக்கப்பட்டவுடன், இப்பகுதி பொருளாதார ரீதியாக மேம்பட பெரும்  உதவியாக இத்திட்டம் அமையும். 

7 comments:

  1. Great sir. Adding not only 16 kkms to salem division but will also help coimbatore, tirupur, erode , salem get rail connectivity to kallakurichi. Great news.

    ReplyDelete
  2. Great sir. Adding not only 16 kkms to salem division but will also help coimbatore, tirupur, erode , salem get rail connectivity to kallakurichi. Great news.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Yes. You are absolutely right. This will be a shot in the arm for the local economic growth. Thanks.

    ReplyDelete