Wednesday 3 February 2016

சேலம் கோட்டத்தில் மின்சார பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

 சேலம் கோட்ட மேலாளர் திரு சுப்ரான்சு பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து அனுப்பி வைக்கிறார்
 பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனம்
 விழிப்புணர்வு பிரசுரங்களை திரு. சுப்ரான்சு வெளியிடுகிறார்
 திரு சுப்ரான்சு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாக்கெட் காலண்டர்களை வழங்குகிறார்
திரு சுப்ரான்சு பத்திரிக்கையாளர்களிடையே உரையாடுகிறார்

ரயில் தடங்கள் மற்றும் இதர ரயில்வே இடங்களை பாதுகாப்பாக கடப்பதன் மூலம் மின்சாரம் தாக்கி உயிரிழப்புகளைத் தவிர்க்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் 3.2.2016 முதல் 5.2.2016 வரை பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளது.  இதற்காக இன்று 3.2.2016 சேலம் கோட்ட  அலுவலகத்தில் இருந்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு சுப்ரான்சு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கூடுதல் கோட்ட  மேலாளர் திரு ஆர்.எஸ். சின்ஹா, கோட்ட முதுநிலை இயக்க மின் பொறியாளர் திரு பி.கே. செல்வன், கோட்ட முதுநிலைய பாதுகாப்பு அதிகாரி திரு. பி.எஸ்.ராஜன் மற்றும் இதர கோட்ட அலுவலர்கள் முன்னிலையில் கொடியசைத்து அனுப்பி வைத்தார். 

விழிப்புணர்வு பிரச்சார வாகனம் சேலம் கோட்டத்தில் உள்ள ரயில்நிலையங்கள், லெவல் கிராசிங்குகள், பள்ளிகள், பொதுமக்கள் கூடும் மார்க்கெட் போன்ற இடங்களில் பயணம் செய்து அவர்களிடையே பிரச்சார வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள், தமிழ் மற்றும் ஆங்கில காலண்டர்  அட்டைகள், கைக்குட்டைகள் போன்றவற்றை விநியோகித்தல், மற்றும் ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளும்.  50000 பேரை சந்திக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இது தவிர, ரயில் எஞ்சின் ஓட்டுநர்கள் உள்ளிட்ட ரயில்வே ஊழியர்களையும் நேரில் சந்தித்து ரயில்தடத்தில் சிவப்பு விளக்கு எரியும் போது வாகனத்தை இயக்குவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் பிரச்சாரம் செய்யப்படும்.

விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து அனுப்பி வைத்த பின்னர் பத்திரிக்கையாளர்களுடன் உரையாடுகையில், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு சுப்ரான்சு இத்தகு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் இந்த ஆண்டில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏதும் நிகழ்வது தவிர்க்கப்பட்டுள்ளது என்று சொன்னார் மேலும், தரைக்கீழ்ப்பாலம், மேம்பாலம், கட்டுவதன் மூலமாகவும், காவலர்களை நியமிப்பதன் மூலமாகவும், அருகிலுள்ள பாதையில் இணைப்பதன் மூலமாகவும் சேலம் கோட்டத்தில் மொத்தம் உள்ள 70 ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் இந்த ஆண்டு 20 லெவல் கிராசிங்குகளும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து ஆளில்லா லெவல் கிராசிங்குகளும், முற்றிலுமாக நீக்கப்பட்டு விடும் என்று தெரிவித்தார் பொது மக்களும் அங்கீகரிக்கப்பட்ட இடங்கள் தவிர மற்ற இடங்களில் ரயில்தடத்தை கடப்பதை தவிர்த்தும் உயர் அழுத்த மின்சாரம் உள்ள மின்கம்பங்களின் அருகில் செல்லாமல் இருப்பதன் மூலமாகவும், ரயில்வேக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

No comments:

Post a Comment