Monday 22 February 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் புட்டிரெட்டிபட்டி ரயில்நிலையத்தில் நடைமேம்பாலம் ஒன்றை 3 மணி நேரத்திற்குள் நிறுவி சாதனை

புட்டிரெட்டிபட்டி ரயில்நிலையம் நடைமேம்பாலம் அமைக்கு முன்னர்
நடைமேம்பாலம் அமைக்கு பணிகள் நடைபெறுகின்றன
 புட்டிரெட்டிபட்டி ரயில்நிலையம் நடைமேம்பாலம்  அமைத்த பின்னர்

தெற்கு ரயில்வே சேலம் கோட்ட இயந்திரவியல் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஒன்றிணைந்து மொரப்பூர் மற்றும் பொம்மிடி ரயில்நிலையங்களுக்கு மத்தியில் உள்ள புட்டிரெட்டிபட்டி ரயில்நிலையத்தில் நடைமேம்பாலம் ஒன்றை 3 மணி நேரத்திற்குள் நிறுவி சாதனை படைத்துள்ளனர்.  பொதுவாக 2 முதல் 3 நாட்கள் பிடிக்கும் இந்த வேலையை நன்றாக திட்டமிட்டதன் மூலமும் முன்னரே வடிவமைக்கப்பட்ட இரும்பு பட்டைகளை பயன்படுத்துவதன் மூலமும் இந்த வேலை விரைவாக முடிக்கப்பட முடிந்தது.  இந்த பணிகள் நடைபெற்ற போது ரயில் இயக்கத்தில் எந்த ஒரு தடையும் இல்லாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.  ரயில்தடத்தில் இருந்து 6.5 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரயில்வே நடைமேம்பாலம், 3 மீட்டர் அகலம் கொண்டுள்ள படியால், பயணிகள் ரயில்தடத்தை எந்த ஒரு ஆபத்துமின்றி எளிதாக கடக்க இயலும். சுமார் 1 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நடைமேம்பாலம் புட்டிரெட்டிபட்டி பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைக்கு இணங்க அமைக்கப்பட்டுள்ளது.  சேலம் ரயில்வே கோட்ட முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளர் திரு. மா.விக்னவேலு, கோட்டப் பொறியாளர் திரு. மாரியப்பன் ஆகியோரது கண்காணிப்பின் கீழ் சிறப்பாக முடிக்கப்பட்ட இந்த பணிகளை பாராட்டிய சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. சுப்ரான்சு, இது போன்ற மற்றோர் மேம்பாலம் திருப்பத்தூர் மற்றும் மொரப்பூர் ரயில் நிலையங்களிடையே உள்ள சாமல்பட்டி ரயில் நிலையத்திலும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.   

No comments:

Post a Comment