Thursday 28 July 2016

சேலம் ரயில் நிலையம் இந்திய ரயில்வே கோட்டத் தலைமையகங்களில் உள்ள சுத்தமாக பராமரிக்கப்படும் ரயில்நிலையங்களில் முதலிடம் மற்றும் இந்திய ரயில்வேயில் முதல் 10 இடங்களில் ஒன்றாக கருத்துக்கணிப்பில் தேர்வு, ஈரோடு ரயில் நிலையத்திற்கு 5ம் இடம்





தூய ரயில், தூய இந்தியா திட்டத்தின் கீழ், இந்திய ரயில்வேயில் உள்ள அனைத்து 1 மற்றும் பிரிவு ரயில் நிலையங்களில் தூய்மையாக பராமரிக்கப்படும் ரயில்நிலையங்கள் பற்றி இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகத்தின் மூலம் பல்வேறு கேள்விகள் கொண்ட ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப் பெற்றது. ஆண்டுக்கு 60 கோடி ரூபாய்க்க மேல் வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்கள் 1 பிரிவிலும், ஆண்டுக்கு 5 கோடி முதல் 60 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டும் ரயில்நிலையங்கள் பிரிவிலும் இருக்கும்இந்திய ரயில்வேயின் இத்தகு 1 மற்றும் பிரிவு ரயில்நிலையங்களில் பயணிகளிடம் அவற்றின் தூய்மை அடிப்படையில் சிறப்பாக மற்றும் சராசரிக்கும் கீழாக பராமரிக்கப்படும் ரயில்நிலையங்களை 1 முதல் 5 வரை வரிசைப்படுத்துமாறு  கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (IRCTC) தற்போது தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளதுஅந்த அறிக்கையின் படி,
1.              ரயில்வே கோட்ட தலைமையகங்களில் உள்ள ரயில் நிலையங்களில், சேலம் ரயில் நிலையம் முதலிடம் பெற்றுள்ளது.
2.         இந்தியா முழுவதும் உள்ள ரயில நிலையங்களின் பட்டியலில் தூய்மையாக பராமரிக்கப்படும் முதல் 10 ரயில்நிலையங்களில் சேலம் ரயில் நிலையம் 9வது இடம் பெற்றுள்ளது.
3.    இந்தியா முழுவதும் உள்ள 68 ரயில்வே கோட்டங்களில், தூய்மையை பராமரிக்கும் ரயில்வே கோட்டங்களின் வரிசையில் சேலம் கோட்டம் 4 வது இடம் பெற்றுள்ளது.
4.        ஒரு நாளைக்கு 10,000 முதல் 25.000 பயணிகள் வரை வந்து செல்லும் ரயில் நிலையங்களின் தூய்மைப் பட்டியலில் சேலம் ரயில் நிலையம் 3ம் இடமும், ஈரோடு ரயில் நிலையம் 5ம் இடமும் பெற்றுள்ளன


சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரி சங்கர் வர்மா அவர்கள் சிறப்பாக இத்தகு சாதனை படைத்ததற்கு சேலம் கோட்ட தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எம்.நரசிம்மம்  மற்றும் இதர அதிகாரிகள் ஊழியர்களையும் பாராட்டினார்.  

தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் பயணச்சீட்டு பரிசோதனைகளில் இலக்குகளை விட சிறப்பாக செயல்பட்டமைக்கு தெற்கு ரயில்வே தலைமை வணிக மேலாளர் பாராட்டு


ரயில்வேயில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வதால் ரயில்வேக்கு வருவாய் இழப்பை சரிசெய்ய தெற்கு ரயில்வே அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. சேலம் கோட்டமும்  திடீர் சோதனை போன்ற பல்வேறு நடவடிக்கைகளுடன் பயணச்சீட்டு இல்லாமலும், பார்சல்களை சரியாக புக்கிங் செய்யாமலும் எடுத்து செல்வதன் மூலமும் ஏற்படும் வருவாய் இழப்பை சரி செய்து வருகிறது. இதற்காக சேலம் கோட்ட பயணச்சீட்டு பரிசோதகர்கள் குழு தங்களது வழக்கமான ரயில்களில் பயணித்து முன்பதிவு பயணச்சீட்டுகளை சோதிக்கும் பணியுடன் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர்களை சோதனை செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. இது தவிர சேலம் கோட்ட வணிகவியல் பிரிவு அதிகாரிகளும் தொடர்ந்து ரயில்களில் பயணச்சீட்டு பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

கடந்த 3 மாதங்களில், 2016 ஏப்ரல் முதல் ஜூன் வரை, சேலம் கோட்ட வணிகவியல் பிரிவு இத்தகு பரிசோதனகள் மேற்கொண்டு ரூ. 82,98,529/- டிக்கட் மற்றும் அபராதத் தொகையாக வசூல் செய்துள்ளது.

பயணச்சீட்டு இல்லாத பயணம் செய்தோர்                                                                 :               18,607
பார்சல்களை சரியாக புக்கிங் செய்யாமலும் எடுத்து சென்றவர்கள்          :               843
மொத்த அபராதம் மற்றும் பயணச்சீட்டு தொகை வசூல்                                    : ரூ       82,98,529.00     

சேலம் கோட்ட பயணச்சீட்டு பரிசோதகர் திருமதி எஸ்.பத்மாவதி, நிர்ணயிக்கப்பட்ட அனைத்து இலக்குகளையும் தாண்டி கடந்த மூன்று மாதங்களில் ரூ. 9,06,580.00 வசூல் செய்ததை பாராட்டி தெற்குரயில்வே தலைமை வணிக மேலாளர் திரு அஜீத் சக்சேனா அவர்கள் ரூ. 5,000/- ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டியுள்ளதுடன் இதர பயணச்சீட்டு பரிசோதகர்களுக்கும் ரூ. 10,000/- ரொக்கப்பரிசு வழங்க ஆணையிட்டுள்ளார். இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா அவர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் சேலம் கோட்டம் பயணச்சீட்டு பரிசோதனையில் சிறப்பாக செயல்பட்டு தெற்கு ரயில்வேயின் மற்ற கோட்டங்களுக்கு முன்மாதிரியாக விளங்குவதாக பாராட்டியுள்ளார்


சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சிறப்பாக இத்தகு சாதனை படைத்ததற்கு சேலம் கோட்ட ஒருங்கிணைப்பு வணிக மேலாளர் திரு விஜு வின் அவர்களையும் இதர வணிகவில் துறை பயணச்சீட்டு பரிசோதகர்களையும் பாராட்டினார்.  

Wednesday 27 July 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் புதிய கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் பொறுப்பேற்பு




திரு சந்திரபால் அவர்கள் தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தின் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.  இந்திய பொருள்கட்டுப்பாட்டுத்துறை சேவையைச் சேர்ந்த திரு சந்திரபால் 1990ம் ஆண்டு இந்திய ரயில்வேப் பணியில் இணைந்தவர்.  சேலம் கோட்டத்தின் கூடுதல் ரயில்வே மேலாளராகப் பொறுப்பேற்கு முன்னர் ஹூப்ளியில் உள்ள தென்மேற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் தலைமை பொருள் கட்டுப்பாட்டுத்துறை மேலாளராகப் பணியாற்றி வந்தார்.  இவர் கட்டுமானப் பொறியியலில் இளநிலைப் பட்டம் பெற்றுள்ளார்.  முன்னதாக வடக்கு ரயில்வே, மத்திய ரயில்வே, சித்தரஞ்சன் இரயில் தொழிற்சாலை மற்றும் தென்மேற்கு ரயில்வேயில் பல்வேறு பொறுப்புக்களை வகித்துள்ளார்.  இதற்கு முன்னர் கூடுதல் ரயில்வே மேலாளராகப் பொறுப்பேற்றிருந்த திரு ரவிசேகர் சின்ஹா அவர்கள் தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் தலைமை பொருள் கட்டுப்பாட்டுத்துறை மேலாளராகப் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

தபால் நிலையங்களில் செயல்படும் அதிகமாக பயன்பாடு இல்லாத ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்களை மூடுவது பற்றிய அறிவிப்பு


தபால் நிலையங்களில் இயங்கி வரும் கீழ்க்கண்ட ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள், ரயில்வே வாரியத்தின் விதிகளின் படி ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 25 பயணச்சீட்டுகளுக்கும் குறைவாக வாங்கப்பட்டு, போதிய பயன்பாடு இல்லாத காரணத்தால் அவை விரைவில் மூடப்பட உள்ளன. எனவே, பொதுமக்கள் மற்றும் பயணிகள் இதை கருத்தில் கொண்டு அருகில் உள்ள ரயில்வே முன்பதிவு மையங்களுக்கு சென்று தங்களது ரயில் பயணச்சீட்டுகளை வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். 

·                     பள்ளிப்பாளையம் தபால் நிலையம் - நாமக்கல் மாவட்டம்
·                     அரவக்குறிச்சி தபால் நிலையம் - கரூர் மாவட்டம்
·                     இடப்பாடி தபால் நிலையம் - சேலம் மாவட்டம்
·                     திருச்செங்கோடு தபால் நிலையம் - நாமக்கல் மாவட்டம்‘
·                     ராசிபுரம் தபால் பிரிப்பு மையம்  - நாமக்கல் மாவட்டம்
·                     மல்லசமுத்த்திரம் தபால் நிலையம் - நாமக்கல் மாவட்டம்
·                     ஊத்தங்கல் தபால் பிரிப்பு நிலையம் - கிருஷ்ணகிரி மாவட்டம்