Tuesday 4 April 2017

பயணச்சீட்டு பரிசோதனையில் ஒரே நாளில் அதிக தொகை வசூலித்து சேலம் கோட்ட வணிகவியல் பிரிவு அதிகாரிகள் சாதனை

பயணச்சீட்டு இல்லாமல் ரயில்களில் பயணம் செய்வதை குறைக்கும் பொருட்டும் பயணிகளிடையே பயணச்சீட்டு வாங்கும் பழக்கத்தை மேம்படுத்தவும், சேலம் கோட்ட வணிகவியல் பிரிவு தொடர்ந்து பல்வேறு நாட்களில் திடீர் பயணச்சீட்டு பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றது.  02.04.2017 அன்று சேலம் கோட்ட வணிகவியல் பிரிவின் 231 பயணச்சீட்டு பரிசோதகர்கள் சேலம் கோட்ட வணிக மேலாளர் திரு. கே. மாது அவர்கள் தலைமையில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், போத்தனூர், கரூர் உள்ளிட்ட சேலம் கோட்டத்தின் அனைத்து ரயில்நிலையங்களிலும் திடீர் பயணச்சீட்டு பரிசோதனை மேற்கொண்டனர்.  அதில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்த 755 பேர்களிடமும், மற்றும் சரியான தொகை செலுத்தாமல் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான சரக்குகளை எடுத்துச் சென்ற 11 பேர்களிடமும், மொத்தம் 3,37,595 ரூபாய் பயணச்சீட்டு தொகை, சரக்குக்கட்டணம், மற்றும் அபராத்த் தொகையாக வசூலிக்கப்பட்டது. இத் தொகை சேலம் கோட்டம் துவக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை ஒரு நாளில் வசூலிக்கப்பட்ட அதிகபட்சத் தொகையாகும். இதற்கு முன்னர், 05.03.2017 அன்று இவ்வாறு நடத்தப்பட்ட திடீர் பயணச்சீட்டு பரிசோதனையின் போது வசூலிக்கப்பட்ட 2,47,025 ரூபாய்தான் அதிகபட்ச தொகையாகும். சேலம் பயணச்சீட்டு பரிசோதனைக்குழுவின் பறக்கும் படையை சேர்ந்த திரு. எம். மனோ செல்வம் அவர்கள் மற்றவர்களை விட அதிகமாக அதாவது 35,780 ரூபாய் பயணச்சீட்டு தொகை மற்றும் அபராதத் தொகையாக வசூலித்து சிறப்பாக செயல்பட்டார். 

பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும், சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் திரு விஜுவின் மற்றும் அவர் கீழ் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா அவர்கள் பாராட்டியதுடன், தொடர்ந்து இத்தகு திடீர் சோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். 


No comments:

Post a Comment