Wednesday 6 January 2016

மின்சக்தி சேமிப்பில் பெரும் பங்காற்றும் வகையில் தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் ரயில்வே ஊழியர்களுக்கு குறைந்த விலையில் எல்ஈடி மின்பல்புகள் விநியோகம்

சேலம் ரயில்வே கோட்ட மேலாளர்  திரு சுப்ரான்சு ஒரு ஊழியருக்கு எல்ஈடி பல்பை வழங்குகிறார். அருகில் சேலம் கோட்ட  முதுநிலை பொது மின்பிரிவு பொறியாளர் திரு. எஸ். ரெங்கராஜன் மற்றும் இளநிலை மின் பொறியாளர் திரு எஸ் பாலசுப்பிரமணியன்
 சேலம் ரயில்வே கோட்ட மேலாளர்  திரு சுப்ரான்சு நிகழ்ச்சியில் பேசுகிறார். அருகில் (இடமிருந்து வலம்) சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் திரு ஆர்.எஸ். சின்ஹா, சேலம் கோட்ட  முதுநிலை பொது மின்பிரிவு பொறியாளர் திரு. எஸ். ரெங்கராஜன் மற்றும் இளநிலை மின் பொறியாளர் திரு எஸ் பாலசுப்பிரமணியன்
சேலம் ரயில்வே கோட்ட மேலாளர்  திரு சுப்ரான்சு எல்ஈடி மின்பல்புகளை சோதிக்கிறார்

பசுமை சக்தி உபயோகத்தை அதிகப்படுத்தவும், மினசக்தியை சேமிக்கவும் தெற்கு ரயில்வே சேலம்  கோட்டம் எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ரயில்வே ஊழியர்களுக்கு மின்சக்தியை பெருமளவில் சேமிக்கும் அதிக ஒளிரும் சக்தி கொண்ட 7 வாட்  எல்ஈடி மின்பல்புகள் 05.01.2016 முதல் விநியோகம் செய்யப்படுகின்றன. வெளிச்சந்தையில் 300 ரூபாய்களுக்கு விற்கப்படும் இந்த  எல்ஈடி மின்பல்புகள் ரயில்வே ஊழியர்களுக்கு 3 வருட உத்திரவாதத்துடன் 100 ரூபாய்களுக்கு வழங்கப்படுகின்றன.  700 லுமினன்ஸ் ஒளிரும் சக்தி  கொண்ட இந்த எல்ஈடி மின்பல்புகள் 40 வாட் சக்தி கொண்ட மின்பல்புகளுக்கு இணையாக ஒளி தரக் கூடியவை, இதனால் 6 மடங்கு மினசக்தி  சேமிப்பாகும்.

இந்த எல்ஈடி மின்பல்புகள் விநியோகம் சேலம் ரயில்வே  கோட்ட மேலாளர் திரு.சுப்ரான்சு அவர்களால், சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் திரு ஆர்.எஸ். சின்ஹா, சேலம் கோட்ட  முதுநிலை பொது மின்பிரிவு பொறியாளர் திரு. எஸ். ரெங்கராஜன் மற்றும் இதர சேலம் கோட்ட அலுவலர்கள் முன்னிலையில் துவக்கி வைக்கப்பட்டது.  ரயில்வே ஊழியர்கள் தங்களது இல்லங்களில் இந்த மின்சக்தி சேமிக்கும் எல்ஈடி மின்பல்புகளை வாங்க பெரும்  ஆர்வம் காட்டியதால் சிறிது நேரத்திலேயே முதல் கட்ட விநியோகத்திற்காக வைக்கப்பட்டிருந்த 300 எல்ஈடி மின்பல்புகளும்  முழுமையாக விநியோகிக்கப்பட்டு முடிக்கப்பட்டன.

சாதாரண 40 வாட் மின்விளக்குகள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உபயோகித்தால் மாதத்திற்கு 14 யூனிட்  மின்சாரம் செலவாகும். ஆனால் இந்த எல்ஈடி மின்பல்புகள் பொருத்தப்படும் போது ஒரு மாதத்திற்கு 2.5 யூனிட்  மின்சாரம் மட்டுமே செலவாகும் என்பதால் ஒரு மாதத்திற்கான மின்சார பில் ஒரு விளக்கிற்கு 34 ரூபாய்கள் வரை குறையும்.

எல்ஈடி மின்பல்புகள் விநியோகம் செய்த பின்னர், சேலம் ரயில்வே  கோட்ட மேலாளர் திரு.சுப்ரான்சு அவர்கள் சேலம்கோட்ட பொது மின் பிரிவு இம்மாதிரி மின்சக்தி சேமிக்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததுடன், சேமிக்கப்படும் ஒவ்வொரு யூனிட் மின்சாரமுமம் தயாரிக்கப்படும் மின்சாரத்திற்கு சமமாகும் என்றும், இவ்வாறு வீடுகளில் சேமிக்கப்படும் மின்சக்தி தொழிற்சாலைகளில் தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட உதவும் என்றும், இதனால் நமது நாடு மின்சக்தி மிகை நாடாகும் வாய்ப்புள்ளது என்றும் சொன்னார்.


இந்திய அரசின், “இல்ல மினசக்தி திறன் மேம்பாட்டு திட்டத்தின்” கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் இது போன்ற எல்ஈடி மின்பல்புகளால், நாடு முழுவதும், ஒரு நாளில் 1.56 கோடி கிலோவாட் யூனிட் மின்சக்தி சேமிக்கப்பட்டு, 6.14 கோடி ரூபாய்கள் வரை சேமிக்கப்படுவதுடன் 12,750 யூனிட்கள் கார்பன்டை ஆக்சைடு வாயு வெளிப்படுவது குறைக்கப்படும்.  அதிகபட்ச மின்தேவையான 1,434 மெகாவாட் மின்சக்தித்  தேவையும் குறைக்கப்படும்.   

No comments:

Post a Comment