Wednesday 7 September 2016

சேலம் கோட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா (07/09/2016)

 
 திரு கே,கே.சர்மா மரக்கன்று நட்டு நீரூற்றுகிறார்
 திரு ஹரிசங்கர் வர்மா தான் நட்ட மரத்திற்கு நீரூற்றுகிறார்
 ஒரு பள்ளி மாணவி மரம் நடும் காட்சி
கல்லூரி மாணவியர் மரம் நடும் காட்சி
 பள்ளிமாணவியர் குழுவாக மரம் நடும் காட்சி
மரம் நடப்பட்ட இடத்தின் அழகிய தோற்றம்

தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் முழுவதும் உள்ள ரயில்வே நிலங்களில் 5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு அவைகளை பராமரித்து வளர்க்கும் மாபெரும் திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று ஓமலூர் மற்றும் மாக்னசைட் ரயில் நிலையங்களுக்கு இடையில் கோட்டகவுண்டன்பட்டி கிராமத்தில் உள்ள ரயில்வே நிலத்தில் 4,5 ஏக்கர் நிலப்பரப்பில் 5001 மரக்கன்றுகளை நடும் விழா நடைபெற்றது. ரயில்தடங்களின் எதிர்கால விஸ்தரிப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பான தூரத்தில்மரக்கன்றுகள் நடப்பட்டன.   

தெற்கு ரயில்வே முதன்மை தலைமைப் பொறியாளர் திரு. கே.கே.சர்மா அவர்கள் இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா அவர்கள் முன்னிலையில் மரக்கன்றுகளை நட்டார்.  கோட்டகவுண்டன்பட்டி அரசுப்பள்ளி மாணவ மாணவியர்கள், சேலம் பத்மவாணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் இணைந்து மரக்கன்றுகள் நட்டனர்.  வேம்பு, வாகை, பாதாம், மூங்கில், சில்வர் ஓக் போன்ற பல்வகை மரக்கன்றுகள் நடப்பட்டன. சொட்டு நீர்ப்பாசனம் மூலம் நீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விரைவில் சூரிய சக்தியால் இயங்கும் மின்பம்பு பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.  மரக்கன்றுகளை சேலம் ரயில் ஜங்சன் ரோட்டரி நிறுவனம், மற்றம் பொக்கிஷம், ரீநேச்சர்  ஆகிய இரு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இந்நிகழ்ச்சிக்கு தேவையான மரக்கன்றுகளை வழங்கினர்.

விழாவில் பேசுகையில் திரு. கே.கே. சர்மா எத்தனை மரக்கன்றுகளை நட்டோம் என்பதை விட, எந்த அளவுக்கு அவற்றை பராமரித்தோம் என்பதே முக்கியம் என்றும், மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களது கனவான தூய மற்றும் பசுமை இந்தியாவை உருவாக்க, மாண்புமிகு ரயில்வே அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு அவர்களது வழிகாட்டுதலின் படி ரயில்வே பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் சொன்ன அவர், உள்ளூர் தட்ப்வெப்பத்திற்கு ஏற்ற மரக்கன்றுகளை நடுமாறும் அறிவுறுத்தினார்.

சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா அவர்கள் இயற்கைக்கு அனைத்து விதமான மரங்களும் தேவைப்படுவதால், பணம் தரும் மரங்களை மட்டுமன்றி அனைத்து வித மரங்களையும் சரியான விகிதத்தில் நடவேண்டியது அவசியம் என்று சொன்னதுடன், இத்தகு விழாக்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொள்வதைக் காண மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார். 

சேலம் கோட்டப் பொறியாளர் திரு மாரியப்பன் அவர்கள் வரவேற்புரை மற்றும் நன்றியுரை வழங்கினார்.   சேலம் கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் திரு சந்திரபால், சேலம் கோட்ட முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளர் மா. விக்னவேலு, இதர சேலம் கோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பெரும் எண்ணிக்கையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment