Friday 30 September 2016

மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில்சலுகைக்கட்டணத்திற்கான புகைப்பட அடையாள அட்டை-பாக்கி அட்டைகளை பெற்றக் கொள்ள அறிவிப்பு




மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில்வேயில் சலுகைக்கட்டணத்தில் ரயில் பயணச்சீட்டுகள் பெறுவதை எளிதாக்கவும், அவ்வாறு சலுகைக்கட்டணம் பெறுவதில் முறைகேடுகள் நடக்காமல் தவிர்க்கவும், இந்திய ரயில்வேயில் புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் இதுவரை 5326 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 5173 பேருக்கு புகைப்பட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் 189 பேர் தங்களது அடையாள அட்டைகளை இது வரை பெற்றுக் கொள்ளவில்லை.  இதற்கான விபரம் கீழ்க்கண்டவாறு


இடம்
பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள்
வழங்கப்பட்ட அடையாள அட்டைகள்
  26.09.2016 அன்று பெறாமல் இருக்கும் அடையாள அட்டைகள்
சேலம்
642
621
21
சேலம் டவுன்
675
658
17
ரூர்
347
347
பாக்கி இல்லை
ரோடு
1252
1207
45
கோயம்புத்தூர்
1515
1508
07
திருப்பூர்
696
643
53
சேலம் கோட்ட அலுவலகம்,சேலம்
235
189
46
மொத்தம்
5362
5173
18 

















அடையாள அட்டைகளைப் பெறும் போது, பயனாளிகள் அதற்கான மருத்துவச் சான்றிதழ்களை நேரில் காண்பித்து அவற்றை பரிசீலிக்க வேண்டியிருப்பதால், மேற்கண்ட இடங்களில் விண்ணப்பம் கொடுத்துள்ள பாக்கி 189 பயனாளிகளும், உடனடியாக அந்தந்த இடங்களில் உள்ள அதிகாரிகளை அணுகி, 05.10.2016க்குள் தங்களது அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  இது குறித்து ஏதேனும் விபரம் தேவைப்பட்டால், அவர்கள் 98409 16964 என்ற செல்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.  

No comments:

Post a Comment