Thursday 22 September 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் இன்று (2016 செப்டம்பர் 22) பங்கேற்பு தூய்மை தினம் அனுசரிப்பு

 சேலம் ரயில்நிலையத்தில் சேலம் கோட்ட கூடுதல் மேலாளர் திரு. சந்திரபால் பிரச்சாரத்தை துவங்கி வைக்கிறார்
 சேலம் ரயில்நிலையத்தில் சேலம் கோட்ட கூடுதல் மேலாளர் திரு. சந்திரபால் பயணிகளிடையே துண்டு பிரசுரம் வழங்குகிறார்

 கோயம்புத்தூர் ரயில்நிலையம்  

 ஈரோடு ரயில்நிலையம்  

  கருர் ரயில்நிலையம் 

  திருப்பத்தூர் ரயில்நிலையம் 

  திருப்பூர் ரயில்நிலையம் 


தூய்மை வாரத்தின் ஐந்தாவது நாளான இன்று 22.09.2016 (வியாழக்கிழமை)- பங்கேற்பு தூய்மை தினமாக சேலம் கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில்நிலையங்களிலும் அனுசரிக்கப்பட்டதுஇன்று சேலம் கோட்டத்தில் உள்ள  அனைத்துரயில்நிலையங்களிலும் சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் திரு. சந்திரபால் அவர்களது தலைமையில் சேலம் கோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால், அரசுசாரா தொண்டு நிறுவனங்கள், பள்ளி மாணவ மாணவியர்களின் பங்கேற்புடன் ரயில்நிலைய வளாகங்கள் மற்றும் இதர பணியிடங்களை சுத்தமாக பராமரிப்பது பற்றி விழிப்புணர்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது.  கோயம்புத்தூரில் தெற்கு ரயில்வே தலைமை மின்பகிர்மானப் பொறியாளர் திரு. பி.வி. சந்திரசேகர் அவர்கள் சேலம் கோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் ப் பணியில் ஈடுபட்டார். சேலத்தில், சோனா பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூரில் ஆதித்யா பொறியியல் கல்லூரி, திருப்பூரில் குமரன் கல்லூரி, திருப்பூர் ரோட்டரி சங்கம், டான்பாஸ்கோ தொண்டு நிறுவனம், மரியாலயம் கைவிடப்பட்ட குழந்தைகள் இல்லம் ஆகியவற்றில் இருந்து பெரும் எண்ணிக்கையில் வந்திருந்த தன்னார்வத் தொண்டர்கள் இப்பணியில் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு உதவினர். அவர்கள் பயணிகளை சந்தித்து தூயமை பற்றிய துண்டு பிரசுரங்களை வழங்கி, ரயில் நிலைய வளாகங்களை தூய்மையாக பராமரிக்க ரயில்வேக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டனர். 


No comments:

Post a Comment