Saturday 17 September 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் தூய்மை இந்தியா வார விழா இன்று (17.09.2016) துவக்கம்

 திரு சந்திரபால் அவர்கள் தூய்மைப்பணியில் ஈடுபட்டுள்ளார்
சேலம் ரயில்நிலையத்தில் முழுவீச்சில் தூய்மைப்பணி 
 திரு சந்திரபால் மரம் நடுகிறார்
 ஈரோடு ரயில்நிலையத்தில் சுத்தப்படுத்தும் பணி
 கரூர் ரயில்நிலையம்
 ஈரோட்டில் தூய்மைப்பிரச்சாரம்
 போத்தனூர் ரயில் நிலையம்
 குன்னூர் ரயில் நிலையம்

இந்திய ரயில்வேயில் ரயில் பயணிகள் மற்றும் பிற ரயில் உபயோகிப்பாளர்களிடையே ரயில் நிலையம் மற்றும் இதர ரயில்வே வளாகங்களை தூய்மையாக வைத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் அவர்களது ஒத்துழைப்பு கோரியும், இன்று (17.09.2016) முதல் 9 நாட்களுக்கு தூய்மை வாரவிழாவினை மேற்கொண்டுள்ளது.

இன்று (17.09.2016) தூய சுற்றுப்புற நாளாக அனுசரிக்கப்பட்டது. சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ரயில் நிலைய வளாகங்களிலும் துப்புறவு பணி மேற்கொள்ளப்பட்டது.

சேலம் ரயில் நிலையத்தில் சேலம் ரயில்வே கோட்ட கூடுதல்மேலாளர் திரு சந்திரபால் அவர்களது தலைமையில் சேலம் கோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ரயில் நிலைய வளாகத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். திரு சந்திரபால் அவர்கள் மற்றவர்களுடன் இணைந்து சேலம் ரயில்நிலைய முன்புறம் மரங்களை நட்டார். சேலம் ரயில்நிலைய வளாகத்தை பார்வையிட்ட திரு சந்திரபால், ஆங்காங்கே இருந்த அனைத்து கருவிகளையும் தனியாக ஒரு அறையில் சேர்த்து வைத்து பராமரிக்கவும், ரயில்நிலையத்தில் திறந்த வெளிகளில் தரையை சமன் செய்து மண்நிரப்பி பசுமையான மரங்களை நடவும் ஆணையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திரு சந்திரபால், ரயில்நிலைய வளாகங்களை சுத்தமாக வைத்திருக்க ரயில்வே நிர்வாகத்துடன் பொதுமக்கள், ரயில்பயணிகள் போன்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், அகில இந்திய அளவில் உள்ள ரயில்வே கோட்ட தலைமையகங்களில் உள்ள ரயில்நிலையங்களில் சேலம் ரயில் நிலையம் மிகத்தூய்மையான ரயில்நிலையமாகவும், இந்தியாவில் உள்ள அனைத்து தூய்மையான ரயில் நிலையங்களில் பட்டியலில் 9வது இடமும் பெற்றிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

சேலம் ரயில்நிலையத்தை சுத்தப்படுத்தும் பணியில் அவருடன் சேலம் கோட்ட ஒருங்கிணைப்பு வணிக மேலாளர் திரு விஜு வின். இதர சேலம் கோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர். இது போன்ற தூய்மைப்பணிகள் சேலம் கோட்டத்தில் உள்ள ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், கரூர், ஊட்டி, குன்னூர் மற்றும் இதர ரயில் நிலையங்களிலும் மேற்கொள்ளப்பட்டன. 

No comments:

Post a Comment