Thursday 9 June 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் 4 முக்கிய ரயில்நிலையங்களில் குழந்தைகளுக்கான உணவுப் பொருள் விற்பனை செய்யும் ஜனனி சேவை மையம் திறப்பு

 ஜனனி சேவை மையம்
 கரூர்
 கோயம்புத்தூர்
ஈரோடு
சேலம்

குழந்தைகளுடன் ரயில்களில் பயணம் செய்யும் பெற்றோர்களுக்கு ரயில்களில் அவர்களுக்கான உணவு கிடைப்பதில் உதவும் பொருட்டு இந்திய ரயில்வே அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் ஜனனி சேவை என்றழைக்கப்படும் குழந்தைகளுக்கான உணவுப் பொருள் விற்பனை செய்யும் ஜனனி சேவை மையங்களை துவக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.  இந் நடவடிக்கை சமீபத்தில் ரயிலில் பயணம் செய்த ஒரு தாய் தனது குழந்தைக்கு பால் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு டிவிட்டரில் மாண்புமிக மத்திய ரயில்வே அமைச்சர் திரு சுரேஷ் பிரபு அவர்களை கேட்டுக் கொண்ட பின்னர் உருவான திட்டமாகும், இது குறித்து ரயில்வே அமைச்சர் அவர்கள் தனது 2016 ரயில்வே பட்ஜட் உரையின் போதும் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.   அதன்படி இத்திட்டம் இப்போது செயலாக்கப்பட்டுள்ளது.

சேலம் கோட்டத்தில் சேலம், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் கரூர் ரயில்நிலையங்களில் உள்ள சைவ உணவகங்களில் இன்று ஜனனி சேவை மையங்கள் சோதனை அடிப்படையில் திறக்கப்பட்டுள்ளன.  இங்கு செரிலாக், லாக்டோஜன், போன்ற குழந்தைகள் உணவுகளுடன், சூடான பால், வெந்நீர் மற்றும் பால்புட்டிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, எதிர்காலத்தில் 5 முதல் 12 வரை உள்ள சிறார்களுக்கான சிற்றுண்டிகளும் தேவையின் அடிப்படையில் கிடைக்க வழி செய்யப்படும். 

சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா இத்தகு நடவடிக்கைகள் ரயில்பயணிகளுக்கு உதவுவதுடன் அவர்களின் பயணத்தை இனிமையானதாக்கும் என்றும், மேலும் இது போன்ற பல நடவடிக்கைகள் எடுக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் சொன்னார்.  

No comments:

Post a Comment