Wednesday 15 June 2016

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரயில்வே அமைச்சகம் பயண விதிகளில் மாற்றம்


தற்போது, மாற்றுத்திறனாளிகள் ரயில்களில் பயணம் செய்யும் போது, அவருடன் பாதுகாவலர் ஒருவர் பயணித்தால் மட்டுமே, பயணச்சீட்டு சலுகை வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு உதவும் பொருட்டு ரயில்வே அமைச்சகம் விதிகளில் மாற்றம் செய்து அவர்கள் பாதுகாவலர் உடன் பயணம் செய்யாத போது கூட அவர்களுக்கு சலுகை கட்டணத்தில் பயணம் செய்ய வழி செய்துள்ளது. தற்போதுள்ள சலுகைக்கான தகுதி விதிமுறைகளில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த புதிய விதிகள் இன்று (15.06.2016) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இதனால், உடன் பயணிக்கும் பாதுகாவலருக்கும் சேர்த்து பயணச்சீட்டு வாங்கும் கட்டாயம் இனிமேல் இருக்காது.  

No comments:

Post a Comment